காதலருக்காக இந்து மதத்திற்கு மாறிய நடிகை சமந்தா?
சென்னை: நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ள நடிகை சமந்தா இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நடிகை சமந்தா இந்து மதத்தை சேர்ந்த தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்து மதம்
நாக சைதன்யாவை காதலிப்பதை அண்மையில் தான் சமந்தா ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அவரை திருமணம் செய்ய சமந்தா இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

நாகர்ஜுனா
நாக சைதன்யா, சமந்தா திருமணத்தை இந்து முறைப்படி நடத்த நாகர்ஜுனா விரும்புகிறாராம். இந்நிலையில் தான் சமந்தா இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் மதம் மாறியபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளன.

2 திருமணம்
நாக சைதன்யா, சமந்தா இந்து முறை தவிர்த்து கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். கிறிஸ்தவ முறைப்படியான திருமணம் சென்னையில் நடக்குமாம்.

சமந்தா
நாக சைதன்யா வீட்டில் சமந்தாவை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. தற்போது அவர்கள் சைதன்யா, சமந்தாவின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











