ஹிப் ஹாப் கலைஞரால் மேடையில் அழுத சமந்தா.. என்ன காரணம் தெரியுமா?.. எல்லாம் அதனால் தான்

மும்பை: Samantha (சமந்தா) ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஹிப் ஹாப் கலைஞர் பாடிய பாடலை கேட்டு நடிகை சமந்தா அழுத வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னை எழுந்தது.

Samantha Cried in Reality Show for Jalaludeen Song

இதனையடுத்து பரஸ்பரமாக இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

சமந்தாவின் கிராஃப்: விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கான க்ரேஸை ரசிகர்கள் மத்தியில் ஏற்றினார் சமந்தா. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். ஆனால் அவரே எதிர்பார்க்க சூழலில் மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓரளவு அந்த நோயிலிருந்து மீண்டார்.

மீண்டும் படங்களில்: மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பிய சமந்தா மீண்டும் திரைப்படங்களில் கமிட்டானார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் படம் அட்டர் ப்ளாப் ஆனது.சமந்தாவின் கரியரிலேயே படுதோல்வியை சந்தித்த படமாக அது அமைந்தது.

மீண்டும் சிகிச்சை: இரண்டாவது இன்னிங்ஸில் முதல் படத்தில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் மீண்டும் நோயின் தீவிரம் அதிகரித்ததாக தகவல் வெளியான சூழலில் சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அவர் அறிவித்து வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் மட்டும் நடிக்கிறார்.

ரியாலிட்டி ஷோ: கடைசியாக அவர் நடித்த குஷி படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் சமந்தா நடுவராக பங்கேற்றார். அப்போது ஹிப் ஹாப் இசை கலைஞரான கிராவிட்டி என்பவர் தான் இயற்றிய ஜலாலுதீன் பாடலை பாடினார். அதனை கேட்டு எமோஷனல் ஆன சமந்தா கண் கலங்கியபடி நின்று ரசித்துக்கொண்டிருந்தார். சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது இந்தப் பாடல்தான் மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்ததாம். அதனால்தான் அந்தப் பாடலை கேட்டு அழுதுவிட்டாராம் அவர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X