ஒரே ஒரு குத்து பாட்டுக்கு நடனமாடும் சமந்தா... என்ன படம்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க !
சென்னை : தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஒரே ஒரு பாட்டுக்கு நடனமாட உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தில், அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.

புஷ்பா திரைப்படம்
ரங்கஸ்தலம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தை இயக்கி வருகிறார் இதில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் அல்லு அர்ஜுன் புஷ்பாராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக நடிக்கிறார்.

வித்தியாசமான கெட்டப்பில்
அதிரடியான ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக யாரை நடிக்க வைக்க போகிறார்கள் என்ற மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருந்தது, பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இறுதியில், மலையாள நடிகர் பகத் பாசில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்காக பகத் பாசில் மொட்டையடித்துக் கொண்டு மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.

5 மொழிகளில்
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 2 பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம், வருகிற டிசம்பர் மாதமும், 2ம் பாகம் அடுத்த ஆண்டும் வெளியாக உள்ளது.

ஒரே ஒரு பாட்டுக்கு நடனம்
இந்நிலையில், செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம்பெறவுள்ள 5வதாக வரும் ஒரு குத்துப் பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











