பிரபலங்கள் மத்தியில் பிரபலமாகும் டோன்ட் ரஷ் சேலஞ்ச்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ! #dontrushchallenge
சென்னை: சினிமா பிரபலங்கள் மத்தியில் டோன்ட் ரஷ் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் வைரலாகி வருகிறது.
திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் அவ்வப்போது ஏதாவது சேலஞ்ச் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் யோகா சேலஞ்ச், வீட்டு வேலை செய்யும் சேலஞ்ச் பில்லோ சேலஞ்ச் என பல வகையான சேலஞ்சுகள் வைரலாகி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது ஒரு சேலஞ்ச் சினிமா பிரபலங்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதாவது #dontrushchallenge தான் அது. இதை நடிகை சமந்தாவும் செய்திருக்கிறார். இதுதொடர்பாக உடற்பயிற்சி பிரியை என்பதால் நடனம் ஆடிக்கொண்டே உடற்பயிற்சியும் செய்கிறார்.
இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், ரகுல் ப்ரீத் சிங், சின்மயி, ரம்யா உள்ளிட்ட நடிகைகள் செம சம்மு எனப் பாராட்டி வருகின்றனர். இதேபோல் நடிகை அமைரா தஸ்தூரும் நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஹீல்ஸ் அணிந்து கொண்டு அவர் போடும் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் செம என வாயை பிளந்துள்ளனர். சூரஜ் பஞ்சோலி உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது வீடியோவை லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











