திரிஷா இல்லன்னா சமந்தா... 96 தெலுங்கு ரீமேக்கின் ஜானு யார் தெரியுமா?
96 தெலுங்கு ரீமேக்கில் திரிஷாவுக்கு பதில் சமந்தா நடிக்க உள்ளதாக பேச்சு அடிப்படுகிறது.
சென்னை: 96 படத்தில் திரிஷாவுக்கு பதில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 96. பிரேம் குமார் இயக்கி இப்படத்தின் பிற மொழி காப்புரிமைக்கு ஏகப்பட்ட போட்டி நிலவியது.
தெலுங்கு ரீமேக் காப்புரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார். தெலுங்கில் இப்படம் வெகு விரைவில் படம்பிடிக்கப்பட உள்ளது. பிரேம் குமார் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ரோல் நடிக்கும் ஹீரோ யார் என்ற கேள்வி வெகுநாட்களாக நீடித்தது. ஒரு வழியாக எங்கேயும் எப்போதும் பட நாயகன் சர்வானந்த் தான் விஜய் சேதுபதியின் ரோலில் நடிக்கப் போகிறார் என்பது உறுதியானது.
இந்நிலையில் திரிஷா ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளருக்கு திரிஷா ரோலில் சமந்தாவை நடிக்க வைக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. இதற்காக அவர் தரப்பில் இருந்து சமந்தாவிடம் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இயக்குனர் பிரேம் குமாருக்கு திரிஷாவையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விருப்பம். இதனால் 96 தெலுங்கு ரீமேக்கின் ஜானுவாக நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











