சந்தோஷ பூரிப்பில் சமந்தாவின் அம்மா.. இனிமேல் நிம்மதியா இருப்பாங்க.. செம நெகிழ்ச்சி போங்க

சென்னை: நடிகை சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை முடித்துவிட்டு இப்போது அவர்கள் கோவாவுக்கு ஹனிமூன் சென்றிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமந்தா பகிர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. முதலில் சைதன்யா வீட்டில் அந்தக் காதலை திருமணத்தில் முடிக்க சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் சைதன்யாவின் பிடிவாதத்தை பார்த்து அவரது குடும்பத்தினர் ஒத்துக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கோவாவில் வைத்து அவர்கள் இரண்டு பேருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது.

விவாகரத்து: திருமணத்துக்கு பிறகும் படங்களிலும், ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸிலும் நடித்தார். சூழல் இப்படி இருக்க அவர் நடித்ததை நிறுத்தும்படி நாக சைதன்யா தரப்பு ப்ரெஷர் போட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் பெரிய பிரச்னையாக மாறியதை அடுத்து; இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இவர்களது பிரிவுக்கு ஃபேமிலி மேன் 2வில் நெருக்கமான காட்சிகளில் சாம் நடித்ததுதான் காரணம் என்றும் ஒரு பேச்சு உண்டு.

Samantha emotional photo with her mother after marrying Raj Nidimoru
Photo Credit:

இயக்குநருடன் காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து கடந்த வருடம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமந்தாவோ தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த ரிலேஷன்ஷிப் பற்றி எந்த செயலிலும் இறங்காத மாதிரியே இருந்தார். அதேசமயம் அவருக்கும், ஃபேமிலி மேன் இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் பேச்சு ஓடியது. ராஜுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது.

ரகசிய திருமணம்: இந்நிலையில் சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். இதில் நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஜோடிக்கு ரசிகர்களும், சினிமா செலிபிரிட்டிகளும் தங்கள் வாழ்த்தினை தொடர்ந்து தெரிவித்துவருகிறார்கள்.

நெகிழ்ச்சியான அம்மா: முக்கியமாக சமந்தாவின் தாய் ரொம்பவே நெகிழ்ச்சியடைந்துவிட்டாராம். மகளின் முதல் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்ததை நினைத்து கவலையாக இருந்த அவர்; இரண்டாவது திருமணம் செய்ததை பார்த்து ஆனந்த் கண்ணீர் விட்டதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சமந்தாவும் தனது தாய் நெகிழ்ச்சியாக தன்னை பார்க்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X