நடந்திருக்கக்கூடாது.. விவாகரத்துக்கு பிறகான வாழ்க்கை பற்றி சமந்தா எமோஷனல்.. ரசிகர்கள் ஆறுதல்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மயோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கும் சமந்தா சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார்.

முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

Samantha Naga Chaitanya

பிஸியான சமந்தா: திருமண முறிவுக்கு பிறகு தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவந்தார் சமந்தா. அந்தவகையில் தமிழில் அவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்தப் பாடலில் நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டானார் சமந்தா.

மயோசிடிஸ்: சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மயோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார்.

சிட்டாடல் வெப் சீரிஸ்: அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடிக்க கமிட்டானார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் & டிகே இயக்கும் அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது. அதில் சமந்தாவும் கலந்துகொண்டிருக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் அவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

சமந்தா பேட்டி: இந்நிலையில் சமந்தா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவாகரத்துக்கு பிறகான வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார்,. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சில விஷயங்களை வாழ்க்கையில் நாம் மாற்றித்தான் ஆகவேண்டும் என்று நினைப்போம். கடந்த மூன்று வருடங்களில் எனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாம் நடந்திருக்கவே கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அது நமது கையில் இல்லை. வாழ்க்கை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வலி இருக்கும்: அனைவரது வாழ்க்கையிலும் வலி இருக்கும். அந்த வலியை எப்படி கடக்கிறோம் என்பதுதான் முக்கியம். வலியை கடந்துவிட்டால் எல்லோரும் வெற்றி பெற்றவர்கள்தான். நான் இப்போது மிகவும் வலிமையாக உணர்கிறேன். இன்றைய உலகத்தில் ஆன்மீகம் அதிகம் தேவைப்படுகிறது. அதுதான் வலியை கடந்து வலிமையை பெற எனக்கு பெரிதும் உதவியது''என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X