உங்களால் எனது வாழ்க்கையில் மாற்றம்.. எப்போதும் நீங்கள்தான்.. நாக சைதன்யா பற்றி கண் கலங்கி பேசிய சமந்தா

சென்னை: கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள். அதற்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். விரைவில் அவர்களின் திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிங்கிளாக இருக்கும் சமந்தா தனது கரியரில் முழு கவனத்தையும் இப்போது செலுத்திவருகிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது வளர்ச்சியின் காரணமாக தெலுங்கிலும் கால் பதித்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது படத்தில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரியல் லைஃபிலும் ஒர்க் அவுட் ஆனது. இதன் காரணமாக இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் நாக சைதன்யாவின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.

samantha naga chaitanya

திருமணம்: ஆனால் சமந்தாவை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று நாக சைதன்யா பிடிவாதமாக இருந்ததால் இருவரது திருமணமும் கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் தொடர்ந்து நடித்துவந்தார். மேலும் நாக சைதன்யா - சமந்தாவின் திருமண வாழ்க்கை சுமூகமாகவும், காதலோடும் நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார்கள்.

சமந்தாவுக்கு வந்த நோய்: திருமண முறிவுக்கு பிறகு சினிமாவில் ஃபுல் ஃபார்மில் கலக்கினார் சமந்தா. ஆனால் அவருக்கு மையோசிடிஸ் என்ற நோய் வந்தது. அதன் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சினிமாவிலிருந்து விலகினார். பிறகு சிகிச்சை முடிந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம், குஷி போன்ற படங்கள் தோல்வியடைந்தன. இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் சாம்.

நிச்சயதார்த்தம்: இதற்கிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அவர்களின் திருமணம் விரைவில் ஹைதராபாத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சோபிதாவுக்கு ராஜஸ்தானில் திருமணத்தை நடத்த ஆசை என்று கூறியதாகவும்; அதன் காரணமாக ராஜஸ்தானிலேயே திருமணத்தை நடத்துவதற்கு நாகார்ஜுனா குடும்பம் ஒத்துக்கொண்டதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கண் கலங்கிய சமந்தா: இந்நிலையில் நாக சைதன்யா பற்றி சமந்தா கண் கலங்கி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அவர்களது திருமணத்தின்போது எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், "உங்களால் நான் கனவு கண்டதுபோல் எனது வாழ்க்கை மாறுவதை என்னால் உணர முடிகிறது. நான் அறிந்த மிகப்பெரிய மனிதர் நீங்கள். நமது அழகான குழந்தைக்கு ஒருநாள் நீங்கள் நல்ல தந்தையாக இருப்பீர்கள் என்று தெரியும். எந்த உலகிலும் எந்த ஜென்மத்திலும் எனக்காக உங்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன்" என்றார்.

சமந்தாவின் ஆசை: முன்னதாக சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் பேசியிருந்தபோது, சமந்தாவிடம் சாகுந்தலம் கதையை சொல்ல நாங்கள் சென்றிருந்தபோது படத்தின் ஷூட்டிங்கை சீக்கிரமே முடித்துவிடுங்கள். குழந்தை பெற்றுக்கொண்டு நாக சைதன்யா மற்றும் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன் என்று சமந்தா கூறியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X