ஸ்விட்சர்லாந்தில் சமந்தா.. ஐஸ் கட்டி மலையில் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்து எப்படி நிக்கிறாரு பாருங்க!
சென்னை: நடிகை சமந்தா ஸ்விட்சர்லாந்தில் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார்.
கணவர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த ஆண்டு இறுதியில் திடீரென விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதனை தொடர்ந்து நடிகை சமந்தா வட இந்தியாவில் ஆன்மிக டூர் சென்று வந்தார்.
இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

ஸ்விட்சர்லாந்தில் சமந்தா
இன்ஸ்டாகிராமில் வொர்க்கவுட் வீடியோக்களையும் ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வந்த நடிகை சமந்தா கொஞ்சம் தன்னையும் ரசிகர்களையும் ஜில்லாக்கலாமே என நினைத்து ஸ்விட்சர்லாந்துக்கு டூர் சென்றுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்விட்சர்லாந்தில் ஐஸ் கட்டி மலையில் ஏறி நின்றபடி எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த மேஜிக்
ஸ்விட்சர்லாந்தில் வெர்பியர் எனும் பனிமலை பிரதேசத்தில் டூர் செய்து வரும் நடிகை சமந்தா 4வது நாளில் அந்த மேஜிக் நடந்துடுச்சு என தனது மலை ஏறும் அனுபவம் குறித்து பதிவிட்டுள்ள கேப்ஷன் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை அதிக அளவில் கவர்ந்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் எடுத்த மேலும், சில புகைப்படங்களையும் ஷேர் செய்ய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தங்க மெடலுடன் வாங்க
மஞ்சள் நிற பஃபர் ஜாக்கெட் அணிந்து கொண்டு வெள்ளை நிற பேன்ட் மற்றும் தலையில் ஹெல்மெட் உடன் பக்கா சேஃப்டியாக மலை ஏற்றம் செய்து விளையாடி வரும் நடிகை சமந்தாவின் இந்த புகைப்படத்தை பார்த்த பின்னணி பாடகியும் சமந்தாவுக்கு பல படங்களில் டப்பிங் பேசி வருபவருமான சின்மயி அப்படியே ஏதாவது போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வாங்கிட்டு வாங்க சம்மு என கமெண்ட் அடித்துள்ளார்.

1.4 மில்லியன் லைக்ஸ்
21.2 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள நடிகை சமந்தா இந்த புகைப்படத்தை வெளியிட்டு 15 மணி நேரம் ஆன நிலையிலேயே, 1.4 மில்லியன் ரசிகர்கள் லைக்குகளை போட்டுள்ளனர். ஏகப்பட்ட ரசிகர்கள் சமந்தாவின் அழகை வர்ணித்தும் அவரது தைரியத்தை பாராட்டியும் வாழ்த்தி வருகின்றனர்.

ஃபிலிம்ஃபேர் அட்டைப் படத்தில்
பாலிவுட் நடிகர்களான நவாசுதிக் சித்திக், மனோஜ் பாஜ்பாய் மற்றும் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்டோருடன் நடிகை சமந்தாவும் இடம்பெற்றுள்ள புதிய ஃபிலிம்ஃபேர் அட்டைப் பட புகைப்படத்தையும் சமீபத்தில் ஷேர் செய்து லைக்குகளை குவித்திருந்தார் நடிகை சமந்தா. சமீபத்தில் அக்ஷய் குமாருடன் குர்குரே விளம்பரத்தில் நடித்த வீடியோவையும் சமந்தா ஷேர் செய்திருந்தார்.

ஜாக்கிரதையா இருங்க
வெளிநாடுகளுக்கு நடிகர்கள் சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், கொரோனா பாதிப்பில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தில் ஹாலிடேவை கொண்டாடி வரும் நடிகை சமந்தாவை ஜாக்கிரதையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











