»   »  ஒரு குடும்பக் குத்துவிளக்கு கவர்ச்சி தப்பான்னு கேக்குதே.. அடடே... ஆச்சரியக்குறி!

ஒரு குடும்பக் குத்துவிளக்கு கவர்ச்சி தப்பான்னு கேக்குதே.. அடடே... ஆச்சரியக்குறி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முழுக்க நனைந்த பின்னர் முக்காடு எதற்கு என்று ஊர் பக்கங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் அதுபோல ஆகிவிட்டது நடிகை சமந்தாவின் நடவடிக்கை. அஞ்சானில் பிகினி கட்டியதற்குப் பின்னர் ஆடை குறைப்பு செய்வது சமந்தாவின் பேஷனாகிவிட்டது.

சினிமாவில் அதீத கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகள் கூட பொது இடங்களில் இழுத்து போர்த்திக்கொண்டு வருவார்கள். நமீதா, ஸ்ரேயா உள்ளிட்ட சில நடிகைகள் இதற்கு விதிவிலக்கு.

ஆனால் அஞ்சான் படத்திற்கு முன்னர் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை சமந்தா தற்போது பொது விழாக்களில் கவர்ச்சி உடையில் பங்கேற்று வருகிறார்.

கவர்ச்சி நாயகி

கவர்ச்சி நாயகி

தெலுங்கு விருது விழா ஒன்றில் முதுகு தெரியும்படி ஆபாசமாக உடை அணிந்து வந்தாராம் சமந்தா. விழாக்குழுவினர் எல்லோரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனராம்.

கருப்பு ஆடையில் கவர்ச்சி

கருப்பு ஆடையில் கவர்ச்சி

இதுபோல கோவாவில் தோழியுடன் புத்தாண்டு கொண்டாட சென்று இருந்த சமந்தா கவர்ச்சியாக ஆடை அணிந்து அங்குள்ள தெருக்களில் பைக் ஓட்டிச் சென்று கலங்கடித்தாராம்.

ஆபாசத்தின் உச்சம்

ஆபாசத்தின் உச்சம்

சென்னையில் நடந்த படவிழா ஒன்றில் நடிகை ஸ்ரேயா இது போல் ஆபாச உடை அணிந்து வந்து கண்டனங்களுக்கு உள்ளானார். போலீசிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவரை மிஞ்சும் விதமாக சமந்தா ஆபாச உடைகளில் வலம் வருகிறாராம்.

கவர்ச்சி பிடிக்கும்

கவர்ச்சி பிடிக்கும்

இது குறித்து கருத்து கூறியுள்ள சமந்தா, எனக்கு கவர்ச்சியாக இருப்பது பிடிக்கும். நடிகைகளை பொறுத்த வரை திரையிலும் பொது இடங்களிலும் அழகான தோற்றத்தோடு இருக்க வேண்டும். எனவேதான் நான் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறேன்.

சிரித்த முகத்தோடு

சிரித்த முகத்தோடு

எப்போதும் நான் சிரித்த முகமாய் இருக்கிறேன் என்கிறார்கள். சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். அதுவே முகத்துக்கு அழகை தரும். சிலர் கேமரா முன்னால் மட்டுமே சிரிப்பார்கள். மற்ற நேரம் இறுக்கமான முகத்தோடு இருப்பார்கள் என்கிறார் சமந்தா.

கவர்ச்சி படங்கள்

கவர்ச்சி படங்கள்

கடந்த ஆண்டு ஜஸ்ட் பார் உமன் இதழில் வெளியான சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமந்தாவை டிவிட்டரில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனராம்.

பத்து லட்சம் பாலோயர்கள்

பத்து லட்சம் பாலோயர்கள்

இதற்காக சமந்தா தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
வெளிப்படையான எனது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்வேன்‘ என குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய படங்கள்

புதிய படங்கள்

தற்போது தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ள சமந்தா, விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள‘ படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் எனவும் சமந்தா குறிப்பிட்டிருக்கிறார். அதிலும் தாராள கவர்ச்சி காட்டியிருக்கிறாரா? என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் சமந்தாவின் ரசிகர்கள்.

    English summary
    Actress Samantha Ruth Prabhu who is very busy in her acting career looks like she took out some time to celebrate this new year.Actress Samantha with her designer cum friend Neeraja Kona left for Goa with a gang of friends to celebrate and welcome New Year 2015
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil