திருமணத்துக்கு பின் இப்படியா?.. கூட்ட நெரிசலில் நிதி அகர்வால் மாதிரியே சமந்தாவும் சிக்கிட்டாங்க.. என்ன ஆனது?

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற சமந்தா; அடுத்ததாக இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராஜுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா கூட்ட நெரிசலில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தார். அப்போது அவருக்கு ஜோடியாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேருக்கும் கோவாவில் வைத்து திருமணம் நடந்தது. சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா சில காலம் சிங்கிளாக இருந்துவிட்டு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார்.

ராஜுடன் காதல்: சமந்தாவோ மையோசிடிஸ் நோயிலிருந்து சிகிச்சையால் மீண்டு; மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி சிட்டாடல் வெப் சிரீஸில் நடித்தார். அந்த வெப் சீரிஸை ஃபேமிலி மேன் உள்ளிட்ட சீரிஸ்களை இயக்கிய ராஜ் இயக்கினார். ஏற்கனவே சமந்தாவுக்கும், ராஜுவுக்கும் இருந்த நெருங்கிய பழக்கம் சிட்டாடல் வெப் சீரிஸிலிருந்து காதலாக மாறியதாக தெரிகிறது. ஆனால் இரண்டு பேருமே அதை பொதுவெளியில் அறிவிக்காமல் இருந்தார்கள்.

Samantha Faces Scary Crowd Rush After Event Safely Escapes to Car
Photo Credit:

இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து அவர்கள் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள். இந்தத் திருமணத்தில் இரண்டு பேருக்கும் நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களை இந்த ஜோடி சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாக போனது. ராஜூக்கும் இது இரண்டாவது திருமணம்.

கரியரில் பிஸி: திருமணத்தை முடித்த கையோடு புது மண தம்பதி தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள். ராஜ் இப்போது கதை எழுதும் பணியில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் சமந்தாவும் கதைகள் கேட்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு காருக்கு திரும்புகையில் அவர் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். ஒருவழியாக தட்டு தடுமாறி கூட்டத்திலிருந்து வெளியேறி காரில் பாதுகாப்பாக அமர்ந்துவிட்டார்.

நிதி அகர்வாலுக்கும்: முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடிகை நிதி அகர்வாலும் இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காருக்கு திரும்புகையில் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது சில விரும்பத்தகாத செயல்களிலும் ரசிகர்கள் சிலர் ஈடுபட்டது வேதனையான ஒன்று. நடிகைகள் இப்படி நிகழ்ச்சிக்கு வரும்போது அவர்களை எந்த சங்கடத்திலும் ரசிகர்கள் ஆழ்த்தாமல் இருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பதை புரிந்து இதுபோன்ற செயல்களை அவர்கள் நிறுத்த வேண்டும் என்பதுதான் பலரது எண்ணம்.

More from Filmibeat

Read more about: actress samantha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X