Samantha - மீண்டும் நடிக்க வந்த சமந்தா?.. ஷூட்டிங்கில் மயக்கம் போட்டுட்டாரா?.. உடம்பு சரியாகல போலையே

சென்னை: சமந்தா மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார். அதனையடுத்து சினிமாவிலிருந்து பிரேக் எடுத்த அவர் சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறிவிட்டு வாங்கிய அட்வான்ஸ் தொகையை கொடுத்தார். அதே சமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் மட்டும் அவர் நடிப்பார் என்று கூறப்பட்டது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். சில வருடங்கள் காதலித்த அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம், செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.

Samantha fainted during the Citadel Web Series shooting

விவாகரத்து: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்ததால்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. ஆனால் எதற்காக பிரிந்தோம் என்பதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. திருமண உறவிலிருந்து வெளியேறிய சமந்தா அதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவு கவர்ச்சி காண்பித்து நடிக்க ஆரம்பித்தார்.

மையோசிடிஸ்: புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டான சூழலில் மையோசிடிஸ் நோய் அவருக்கு வந்தது. இதன் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். ஒருவழியாக நோயிலிருந்து மீண்ட அவர் சாகுந்தலம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்தது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.

குட்டி பிரேக்: சாகுந்தலம் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். அந்தப் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி தற்போது விலகியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருக்கும் அவர் மீண்டும் விரைவில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது. அதிலும் சல்மான் கானுடன் அவர் நடிக்கலாம் என்று பேச்சு எழுந்தது.

சிட்டாடல் வெப் சீரிஸ்: இதற்கிடையே பிரேக் எடுப்பதாக கூறி அட்வான்ஸை திருப்பி கொடுத்த சமந்தா சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதனை ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் & டிகே இயக்குகிறார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் சமந்தா அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு ஆக்‌ஷன் காட்சியை இயக்குநர்கள் படமாக்கினார்களாம். அப்போது சமந்தாவிடம் நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் சமந்தா ஆர்வத்துடன் நடித்துக்கொடுத்தாராம். அந்த ஷாட்டை முடித்துவிட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார் என்றும் பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தாவுக்கு ஏன் இந்த ரிஸ்க். முழுதாக உடலை குணப்படுத்திவிட்டு வந்து நடிக்கலாமே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X