அடுத்த வருடத்தில் புதிய காதலர்.. சமந்தா வாழ்க்கையில் இன்னொரு திருமணமா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. அதில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் மேலும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பிறகு பிரிந்தார். இந்தச் சூழலில் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
நடிகை சமந்தா தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமான அவர் பிறகு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். அதன்படி தமிழில் அவர் விஜய், சூர்யா, விக்ரம் என பலருடன் நடித்து திறமையான மற்றும் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் கௌதம் மேனன். அந்தப் படத்தில் சமந்தாவை ஹீரோயினாக புக் செய்தார்.

காதல் மலர்ந்தது: அந்தப் படத்தில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார் சமந்தார். முதலில் இந்தக் காதலுக்கு நாகார்ஜுனா ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. பிறகு சைதன்யா விடாப்பிடியாக இருந்ததால் நாகார்ஜுனா க்ரீன் சிக்னல் கொடுத்தார். தொடர்ந்து இருவரது திருமணமும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் நடந்தது. பெரிய இடத்து மருமகள் ஆன சமந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்.
பிரிந்த சமந்தா: திருமணத்துக்கு பிறகு உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்தினார்கள் இருவரும். மேலும் சமந்தாவும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தவில்லை. அதேசமயம் நடிப்பதை நிறுத்திவிடுமாறு நாக சைதன்யா குடும்பம் கேட்டதாகவும்; அதற்கு சமந்தா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் முதல் தீப்பொறி அந்த வீட்டுக்குள் விழுந்தது. தொடர்ந்து குடும்பத்தினரின் வலியுறுத்தலுக்கு சமந்தா செவி மடுக்காததால் விரிசல் ஏற்பட்டு இரண்டு பேரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
மையோசிடிஸ்: திருமண முறிவுக்கு பிறகு சமந்தாவால் இனி தனது கரியரில் கவனமே செலுத்த முடியாது என்று பலரும் கூறினார்கள். ஆனால் அதன் பிறகுதான் சமந்தா போல்டாக இறங்கினார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு செம ஆட்டம் போட்டார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதன் காரணமாக நடிப்பிலிருந்து பிரேக் எடுத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்தார்.
இரண்டாவது திருமணம்: இதற்கிடையே சமந்தா சிங்கிளாக இருந்தது போதும்; இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் தனக்கு இரண்டாவது திருமணத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று சமந்தா தெளிவாக கூறினார். சூழல் இப்படி இருக்க சமந்தா மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் சமந்தா.
சமந்தாவின் இன்ஸ்டா பதிவு: இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதன்படி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2025ஆம் ஆண்டுக்கான ராசி பலனை பகிர்ந்திருக்கிறார். அதில் சில ராசிகளை குறிப்பிட்டு, 'நீங்கள் அடுத்த வருடம் நேர்மையான மற்றும் அன்பான துணையை பெறுவீர்கள்' என்று இருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தா ஏன் இப்போதைக்கு இதை பகிர வேண்டும். ஒருவேளை தனக்கு காதலிக்கும் ஆசை வந்துவிட்டது; கண்டிப்பாக நேர்மையான துணை தனக்கு கிடைப்பார் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்று மறைமுகமாக தெரிவிக்கிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











