காதலில் விழுந்துவிட்டாரா சமந்தா?.. யார் அந்த நபர்?.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் கமிட்டான படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சமந்தாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது உடன் நடித்த நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்கள். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் திருமணம் ஜோராக நடந்தது.

samantha naga chaitanya

விவாகரத்து: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சமந்தாவின் நடிப்பு பயணத்தை நாகார்ஜுனா குடும்பம் விரும்பாததால் சில பிரச்னைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள். அவர்களது விவாகரத்து அறிவிப்பு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் ஷாக்கை கொடுத்தது.

இரண்டாவது திருமணம்: இதனையடுத்து மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. விரைவில் அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் நடக்கலாம் என்று கடந்த சில நாட்களாக தகவல் பரவிவருகிறது.

சிட்டாடல்: இதற்கிடையே சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் அவர். சீரிஸானது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. அதில் சமந்தாவின் நடிப்பு பட்டையை கிளப்புவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் சில படங்களிலும் அவர் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவரது கரியர் மீண்டும் பீக்கில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மீண்டும் காதலில் சமந்தா?: இந்நிலையில் சமந்தா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஒருவருடன் கை பிடித்தபடி நடந்துவருகிறார் சாம். அந்த நபர் ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அட இது புதுசா இருக்கே. ஒருவேளை அந்த நபரைத்தான் சமந்தா காதலிக்கிறாரோ.. அப்படி காதலித்தால் நல்லதுதான். விரைவில் திருமணமும் செய்துகொள்ள வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சமந்தா, இரண்டாவது திருமணத்தில் பெரிதாக நம்பிக்கையில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X