சமந்தாவுக்கு பிரமாண்ட வீடு பரிசு.. நாக சைதன்யா இருக்கும் அதே ஏரியா.. ராஜ் நிடிமோரு கொட்டிருக்காரு ப்பா!
ஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன்பு எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் இரண்டு பேருக்கும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்தை முடித்துவிட்டு இப்போது புதுமண ஜோடி ஹனிமூன் சென்றிருப்பதாக கூறப்படும் சூழலில்; புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
முதல் திருமண வாழ்க்கை சமந்தாவுக்கு ஒழுங்காக அமையவில்லை. நாக சைதன்யாவை திருமணம் செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அப்படிப்பட்ட சூழலில் அவருக்கும் சைதன்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட; சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா தரப்பு கொடுப்பதாக சொன்ன ஜீவனாம்சத்தையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டதாக ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
ராஜுடன் காதல்: நாக சைதன்யாவை பிரிந்த பிறகு மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை, சில படங்களில் நடிப்பது என இருந்த சமந்தா சிங்கிளாகவே வலம் வந்தார். இதனையடுத்து இயக்குநர் ராஜ் நிடிமோரு இயக்கத்தில் நடித்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியது. ராஜும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இரண்டு பேரும் தங்கள் காதலை பொது வெளியில் சொல்லாமல் பாதுகாத்துவந்தார்கள்.

திருமணம் செய்துகொண்ட ஜோடி: இப்படிப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு சமந்தாவுக்கும், ராஜுக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் நடந்தது. முறைப்படி மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் திருமண தேதியை சொல்லிவிட்டுத்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இந்த ஜோடி ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக சைலெண்ட்டாக வேலைகளை தொடங்கி சம்பவத்தை செய்தது.
குவியும் வாழ்த்து: திடீரென அவர்கள் திருமணம் செய்துகொண்டது அனைவருக்குமே ஸ்வீட் சர்ப்ரைஸாகத்தான் இருந்தது. புது மண தம்பதிக்கு திரைத்துறையிலிருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அவர்கள் இப்போது ஜாலியாக ஹனிமூன் சென்றிருப்பதாக தெரிகிறது. விரைவில் அந்த இன்ப சுற்றுலா தொடர்பான புகைப்படங்களையும் சமந்தா வெளியிடலாம். இந்நிலையில் அவர்கள் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பிரமாண்ட வீடு பரிசு?: அதாவது திருமணத்தின்போது கோடிக்கணக்கிலான வைர மோதிரத்தை சமந்தாவுக்கு அணிவித்திருந்தார் ராஜ் நிடிமோரு. தற்போது திருமணம் முடிந்த கையோடு ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் 65 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட வீட்டினை பரிசாக கொடுத்திருக்கிறாராம். அதேபோல் மும்பையிலும் ஒரு வீட்டினை வாங்கி கொடுத்திருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ சமந்தாவுக்கு கொட்டி கொடுக்கிறாரே என்று ஆச்சரியத்தோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் தனது மனைவி சோபிதா துலிபாலாவுடன் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில்தான் வசித்துவருகிறார். இப்போது இவர்களும் அதே ஏரியாவில் வீடு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











