»   »  பிகினி போட்டோ வெளியிட்ட சமந்தா: வறுத்தெடுத்த நெட்டிசன்கள், பிளாக் செய்து பதிலடி

பிகினி போட்டோ வெளியிட்ட சமந்தா: வறுத்தெடுத்த நெட்டிசன்கள், பிளாக் செய்து பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

படங்களில் பிசியாக இருக்கும் சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறுகிறது.

இந்நிலையில் குட்டி வெகேஷனுக்கு கிளம்பியுள்ளார் சமந்தா.

பிகினி

இன்றில் இருந்து குட்டி வெகேஷன் ஆரம்பம் என்று கூறி பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சமந்தா. அவர் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர அவ்வாறு செய்தார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சமந்தாவின் பிகினி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்தனர். என்னமா இப்படி பண்ணிட்டீங்களேம்மா நான் உங்களோட ஃபேனா இருக்கிறது அசிங்கமா இருக்கு என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

நல்ல ஃபேமிலி லைப் வந்துருக்கு அதை ஸ்பாயில் பண்ண வேண்டாம். இந்த புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் என்று மற்றொரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

அந்தரங்கம்

அந்தரங்கம்

ஒரு பக்கம் இந்த நாடு கெட்டு குட்டிசெவுராக போவதற்க்கு நீங்களும் ஒரு காரணமே. இன்றைய காலகட்டத்தில் Modelling & Trending & Fashion என்ற பெயரில் தன்னுடைய அந்தரங்கத்தை இந்த உலகிற்கு பகிர்ந்து அதன் மூலம் தவறான எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கும் கூட Like , Comments , Share - எதிர் பார்த்து ❗❗ மிகவும் வருத்தமாக இருக்கிறது. மனிதன் நல்லதை ஏற்க தாமதமாகும். ஆனால் இது போன்ற ஆபாசங்கள் விரைவில் பதியப்படும் மற்றும் பிறர்க்கு பகிரப்படும். ஆகையால் இது போன்று Post செய்து சர்ச்சைக்கு உள்ளாக வேண்டாம். மேலும் இது அனைவருக்கும் சமர்ப்பணம். 👧பெண்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அவை பிறரின் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இருக்க கூடாது. இதுவே என்னுடைய பணிவான வேண்டுகோள்.🌟❇🌟 என்கிறார் மற்றொரு ரசிகர்.

பிளாக்

பிளாக்

ட்விட்டரில் தன்னை கேவலப்படுத்தி ட்வீட் போட்ட ஒருவரை சமந்தா பிளாக் செய்துள்ளார். இதற்கிடையே அந்த நபர் தான் போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Samantha gets trolled by netizens after she posted a picture of her bikini on instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil