சமந்தாவை கைது பண்ணனும்.. தப்பான ட்ரீட்மெண்ட் எடுக்க சொல்றாரு.. கொந்தளித்த டாக்டர்.. நடிகை விளக்கம்!
சென்னை: நடிகை சமந்தா மயோசைட்டிஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிறார். இந்நிலையில், சமீப காலமாக பாட் காஸ்ட் மூலமாக மருத்துவம் பற்றியும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்தும் சமந்தா பேசி வருகிறார்.
சமீபத்தில், நடிகை சமந்தா ஹைட்ரைஜன் பெராக்ஸைடு பயன்படுத்துவது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தி லிவர் டாக் (The Liver DoC) எனும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் சமந்தா சொல்லும் சிகிச்சைகள் தவறானவை என்றும் அதற்காக அவரை சிறையில் தள்ள வேண்டும் என விளாசித் தள்ளியுள்ளார்.

இந்நிலையில், அந்த கமெண்ட்டை பார்த்து அப்செட்டான நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நெடிய விளக்கத்தை சுமார் 3 பக்கங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
உயிருக்கே ஆபத்தாகிவிடும்: தி லிவர் டாக் எனும் சோஷியல் மீடியா பக்கத்தில், நடிகை சமந்தா "சுவாசக் கோளாறு சிகிச்சைக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்து முற்றிலும் உடலுக்கு தீங்கானது என அமெரிக்காவின் ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி மில்லியன் கணக்கான தனது ஃபாலோயர்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகை சமந்தாவை கைது செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா விளக்கம்: கடந்த சில ஆண்டுகளாக, நான் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. எனக்குப் பரிந்துரைக்கப்பட்ட அனைத்தையும் நான் முயற்சித்தேன். இந்த பரிந்துரைகள் மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்களிடமிருந்து வந்தவை மற்றும் என்னைப் போன்ற ஒருவருக்கு முடிந்தவரை தனிப்பட்ட ஆராய்ச்சி செய்த பிறகு இந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இது மிகவும் விலை உயர்ந்தவை. நான் அவற்றை வாங்குவதற்கு எவ்வளவு அதிர்ஷ்டசாலி என நினைக்கும் வேளையில், முடியாதவர்களைப் பற்றியும் நான் அடிக்கடி நினைத்து பார்த்திருக்கிறேன். நீண்ட காலமாக, வழக்கமான சிகிச்சைகள் என்னை குணப்படுத்தவில்லை. அந்த நிலை எனக்கானதாக கூட இருக்கலாம். மற்றவர்களுக்கு அந்த சிகிச்சைகள் பலனளித்திருக்கலாம்.
மாற்று சிகிச்சை முறைகளை ஆராய்தல்: அதன் காரணமாக மாற்று சிகிச்சைகளை ஆராய ஆரம்பித்தேன். பல சோதனைகளுக்கு பிறகு எனக்கு பிரமாதமாக வேலை செய்யும் சிகிச்சைகளைக் கண்டறிந்தேன். அதைத்தான் மற்றவர்களுக்கு பயனளிக்க முடிந்தால் பயனளிக்கட்டுமே என்றுக் கூறினேன். டிஆர்டிஓவில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. பாரம்பரிய மருத்துவத்தில் கல்வி பயின்ற போதிலும், அவர் மாற்று சிகிச்சையை பரிந்துரைத்தார்.

சமந்தாவை கைது பண்ணனும்: ஆனால், ஒரு ஜென்டில்மேன் அவரும் ஒரு டாக்டர் என நினைக்கிறேன், எனது பதிவையும் நோக்கங்களையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவர் என்னை விட அதிகமாக அறிந்தவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, அவருடைய நோக்கங்கள் உன்னதமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருப்பினும், அவர் தனது வார்த்தைகளால் மிகவும் என்னை கஷ்டப்படுத்தி விட்டார். குறிப்பாக என்னை சிறையில் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சரண்டரான சமந்தா: நான் ஒரு பிரபல நடிகையாக இருப்பதால் என் மீது அவருக்கு என்ன வன்மமோ தெரியவில்லை. இப்படியெல்லாம் கமெண்ட் போட்டுள்ளார். ஆனால், இந்த விஷயத்தை நான் நேரடியாக டீல் செய்யாமல் அந்த மருத்துவரையும் எனக்கு மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவரையும் விட்டு விவாதிக்க வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என நினைக்கிறேன். இதற்கு மேல் மருத்துவ குறிப்புகளை கூறுவதற்கு முன் மேலும், கவனமாக இருக்க விரும்புகிறேன் என சமந்தா பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











