பாவம்.. நிலைமை இப்படி ஆகிடுச்சே.. பூனைக்கு லிப் கிஸ் கொடுத்த சமந்தா.. அந்த கேட் ரியாக்‌ஷன் தான் செம!

சென்னை: நடிகை சமந்தா தனது செல்ல நாய்க்குட்டி மற்றும் பூனைக்குட்டிகள் உடன் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நடிகை சமந்தா அடுத்ததாக 'பங்காரம்' என்னும் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த அறிவிப்பு வெளியானது. படத்தின் இயக்குநர் மற்றும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் ஆகும் என்கிற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Samantha gives lip kiss to Cat video and it s reaction goes trending

பாலிவுட்டில் சமந்தா படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அவருக்கு இந்தியில் ஒரு படம் கூட கிடைக்கவில்லை. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகள் இந்தியில் பெரிய படங்களில் நடித்து வருகின்றனர்.

பூனைக்கு லிப் கிஸ்: நடிகை சமந்தா சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய இன்ஸ்டாகிராம் போஸ்டில் கண்ணாடி அணிந்து கொண்டு கருப்பு நிற பூனைக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பூனையின் ரியாக்ஷன்: சமந்தா பூனைக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் போது அதை பார்த்து விட்டு பயந்து போய் பூனை பார்ப்பது போன்றும் மீண்டும் சமந்தா உதட்டில் முத்தம் கொடுக்க பூனை ஒரு மாதிரியாக பார்க்கும் காட்சிகளை தற்போது சமந்தா வெளியிட்டு்ள்ளார். கடைசியாக குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக நடித்திருந்த சமந்தா தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் பூனை மற்றும் நாய் குட்டிகளுடன் விளையாடி வருகிறார் என்றும் அந்தப் பூனை குட்டியாக நான் இருக்க கூடாதா என சமந்தா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நிர்வாண புகைப்பட சர்ச்சை: சமந்தா திடீரென பிகினி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நிலையில் சானா பாத் எடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். வெறும் டவலை கட்டிக்கொண்டு சமந்தா இருக்கும் போட்டோவுடன் அவர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டதாகவும் பின்னர் அவசர அவசரமாக அதை டெலிட் செய்ததாகவும் டிரெண்டானது. ஆனால், அதுதொடர்பான எந்த விளக்கத்தையும் கொடுக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என சமந்தா அதிரடியாக கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பர படங்களில் பிஸி: நடிகை சமந்தா ஐஸ் க்ரீம் விளம்பரம், மம்மூட்டியுடன் பிரபல பிராண்டின் விளம்பரம் என நடித்து வருகிறார். ஏற்கனவே சரக்கு விளம்பரத்தில் நடித்து சர்ச்சையை கிளப்பிய சமந்தா தொடர்ந்து விளம்பரங்களில் பிஸியாகி உள்ளார். புஷ்பா 2 படத்தில் சமந்தாவின் டான்ஸ் இருக்குமா? என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்தோடுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிட்டாடல் எப்போ?: பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் இணைந்து சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் சீரிஸ் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அதன் ரிலீஸ் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஏற்கனவே சமந்தா தி ஃபேமிலி மேன் சீசன் 2வில் பட்டையை கிளப்பிய நிலையில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியானால் இந்தியில் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X