மீண்டும் வெப் சீரிஸில் இணைந்துள்ள சமந்தா... சர்ச்சை இல்லாம இருக்குமா?

மும்பை : நடிகை சமந்தா நடிப்பில் வெளியான பேமிலி மேன் 2 வெப் தொடர் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருந்தது. இந்தத் தொடரில் அவர் போராளியா நடித்திருந்தார். இதையடுத்து இந்தியில் நடிக்க அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக உள்ளார். திருமணமாகியும் அவரது கேரியரை யாரும் அசைக்க முடியவில்லை. ஆனால் அவரது திருமணம் தற்போது விவாகரத்தில் முடிந்துள்ளது. ஆயினும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தன்னுடைய திரைப்பயணத்தில் சேர்க்காமல் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அவரது நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதேபோல யசோதா படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் ரசிகர்களின் பாராட்டிற்கு உள்ளானது. அனைவரும் இதை விரும்பி பார்த்தனர்.

பேமிலி மேன் 2 வெப் தொடர்

பேமிலி மேன் 2 வெப் தொடர்

இந்த தொடரில் போராளியாக நடித்து அசத்தியிருந்தார் சமந்தா. இந்த வெப் தொடர் காரணமாகவே நாக சைத்தன்யாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. ஆயினும் இந்தத் தொடரையடுத்து அவருக்கு இந்தியில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

மீண்டும் வெப் தொடர்

மீண்டும் வெப் தொடர்

இதனிடையே, அடுத்ததாக இந்தியில் ஒரு வெப் தொடரிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. இந்த தொடரை இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கவுள்ளனர். அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப் தொடரின் கதையை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்படவுள்ளது.

 வருண் தவானுடன் வெப் தொடர்

வருண் தவானுடன் வெப் தொடர்

இந்த இயக்குநர்களே பேமிலி மேன் சீரிசின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் பிரபல இந்தி நடிகர் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் சமந்தாவும் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X