அடுத்த குத்தாட்டத்திற்கு ரெடியாகும் சமந்தா... இந்த முறை யார்கூடன்னு பாருங்க
சென்னை : நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
விவாகரத்தான நிலையில் இந்த குத்தாட்ட பாடலுக்கு அவர் ஆட்டம் போட்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்த குத்தாட்டத்திற்கு அவர் தயாராகியுள்ளார். இந்த முறை வேறு டோலிவுட் ஹீரோவுடன் அவர் குத்தாட்டம் போடவுள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் தமிழில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் இவர் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கடந்த 2017ல் இவருக்கும் நாக சைத்தன்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

விவாகரத்து முடிவு
திருமணம் முடிந்தும் பல முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்து வந்தார். தி பேமிலி மேன் உள்ளிட்ட வெப் தொடர்களிலும் இவர் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே இவருக்கும் நாக சைத்தன்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் விவாகரத்தை அறிவித்தனர்.

அதிர்ச்சி முடிவு
திரையுலகினரிடையே இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயினும் சமந்தாவும் நாக சைத்தன்யாவும் நண்பர்களாகவே பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்தது.

ஆன்மீக பாதையில் சமந்தா
இருவரும் தங்களது பாதையில் சிறப்பான நடையை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனிடையே சமந்தா, ஆன்மீக பயணங்களையும் மேற்கொண்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது ஸ்விட்சர்லாந்தில் அவர் விடுமுறையை கழித்து வருகிறார்.

குத்தாட்டம் போட்ட சமந்தா
முன்னதாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஊ சொல்றியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சமந்தா. விவாகரத்து முடிந்த கையோடு இந்தப் பாடலுக்கு அவர் ஆட்டம் போட்டதும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் படத்திற்கு சிறப்பான பிரமோஷனாக அமைந்தது. மேலும் பாடலுக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பும் பிரமோஷனுக்கு உதவியது.

ரூ.5 கோடி சம்பளம்?
இந்தப் பாடலுக்கு சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு ஓவராக கவர்ச்சி காட்டி ஆடியிருந்தார் சமந்தா. இதுகுறித்த விமர்சனங்கள் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் அவர் தொடர்ந்து தனது திரைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த குத்தாட்டம்
இவரது இந்த ஓற்றைப் பாடலுக்கான ஆட்டம் மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளநிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் குத்தாட்டம் போட தயாராகிவிட்டார் சமந்தா. அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் லிகர் படத்தில்தான் சமந்தா ஆட்டம் போடவிருக்கிறாராம்.
Recommended Video

விஜய் தேவரகொண்டாவுடன் ஆட்டம்
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சமந்தாவின் ஆட்டமும் ஒரு காரணமாக அமைந்துள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து ஓற்றை பாடலுக்கு நடனமாட தயாரிப்பாளர்கள் அணுகி வருகிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் ஆட்டம் போட சமந்தாவும் ஓகே சொல்லிவிட்டாராம் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும், இதுவும் புஷ்பா படத்தின் பாடல் போன்றே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











