"அஞ்சான்" புஸ்ஸானதால் "கத்தி" மீது நம்பிக்கை வைத்திருக்கும் சமந்தா.. அதுவும் "தரிசானால்"???
சென்னை: விஜய் படம் பார்த்து வளர்ந்தவள் நான் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் கத்தி படத்தின் மீது பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளார் சமந்தா.
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா. தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள அவருக்கு தமிழில் ஹிட் படம் அமையவில்லை. இந்நிலையில் தான் அவர் அஞ்சான் படம் தனக்கு மிகவும் கைொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் எதிர்பார்ப்பு வீணாகப் போனது.
இதையடுத்து தான் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள கத்தி படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

பல்லாவரம்
ஆந்திராவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தான் ஒரு பக்கா பல்லாவரம் பொண்ணு என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

விஜய் படங்கள்
நான் விஜய் டங்கள் பார்த்து வளர்ந்தவள். அப்படி இருக்கையில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சமந்தா.

அமலா பால்
தலைவா படம் ஹிட்டாகட்டும் நான் தான் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை என்று கூறினார் அமலா பால். தலைவா புஸ்ஸானதால் அவரது ஆசையும் புஸ்ஸானது. இந்நிலையில் அமலாவை போன்றே சமந்தாவும் நம்பிக்கை வைத்துள்ளார்.

அஞ்சான்
ஏற்கனவே சமந்தா அஞ்சான் மூலமாக கோலிவுட்டில் ஹிட் நாயகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்காமல் போனதால் கத்தி மீது நம்பிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











