நடுராத்திரி 11 மணிக்கு சமந்தாவுக்கு மெசேஜ் பண்ண அந்த பிரபலம்.. தீயாக பரவும் வாட்ஸ்அப் சாட்!
சென்னை: நடிகை சமந்தாவுக்கு நடுராத்திரியில் பிரபலம் ஒருவர் வாட்ஸ்அப்பில் பண்ண சாட் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை சமந்தா அடுத்த திருமணத்தை பற்றி இன்னமும் யோசிக்கவில்லை.

மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சிரமப்பட்டு வரும் சமந்தா அதிலிருந்து சிகிச்சை மூலமாக மீண்ட நிலையில், தொடர்ந்து உடற்பயிற்சி விடாமல் செய்து வருகிறார்.
சமந்தாவுக்கு மிட்நைட்டில் வந்த மெசேஜ்: நடிகை சமந்தா என்ன தான் உடலில் பிரச்சனை ஏற்பட்டாலும், ஜிம்முக்கு போவதை தொடர்ந்த் செய்து வருகிறார். சினிமா ஷூட்டிங் முடித்து விட்டு ஓய்வில் இருக்கும் நேரங்களில் ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்து தனது உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முயற்சித்து வருகிறார். இந்நிலையில், ஜிம் டிரெய்னர் நள்ளிரவு நேரத்தில் நடிகை சமந்தாவுக்கு மெசேஜ் செய்தது குறித்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை சமந்தா வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
முடியல வரமாட்டேன்: நடிகை சமந்தாவுக்கு அவரது ஜிம் பயிற்சியாளர் 11 மணிக்கு ஷார்ப்பாக ஜிம்மில் இருக்க வேண்டும் என மெசேஜ் செய்ய, இன்று எனக்கு உடல் நலம் சரியாக இல்லை. இன்று ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என சமந்தா மெசேஜ் போட்ட நிலையில், 11 மணி ஆகி விட்டது, நான் வந்துட்டேன்.. நீ எங்கே காணோம் என ஜிம் டிரெய்னர் லீவே கொடுக்காமல் படுத்தி எடுக்கிறார் என தங்களுக்குள் நடைபெற்ற சாட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், அந்த மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் தீயாக பரவி வருகிறது.

சறுக்கும் சமந்தா: சாகுந்தலம் படத்தைத் தொடர்ந்து சமந்தா நடித்த குஷி திரைப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் கிடைத்த சந்தோஷம் ஒரு வாரம் கூட நீடிக்காமல் படம் சுமார் என்கிற ரீதியில் பாக்ஸ் ஆபிஸிலும் கோட்டையை விட்டது. அடுத்து சமந்தா நடிப்பில் சிட்டாடல் வெப்சீரிஸ் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், என்ன திரைப்படம் வரப்போகிறது என்பதை அறிந்து கொள்ள சமந்தா ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











