40 கிலோ எடை.. சும்மா அசால்டா தூக்கி அசத்தும் சமந்தா.. புகழும் ரசிகர்கள் !
ஐதராபாத்: சமந்தா ஜிம்மில் படு பிஸியாக ஒர்க் அவுட் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா. கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்த படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆனது, ஆனால் சமந்தா அப்படியே இருக்கிறார் என்பது ரசிகர்களின் கருத்து.
இதன் பின் பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய 'இகா' தான் இப்படம் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான தேசிய பிலிம்பேர் விருதை பெற்றார். இதே ஆண்டு தமிழில் இவரது நடிப்பில் வெளியானது நீதானே என் பொன் வசந்தம் இப்படத்திற்கும் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்கள் உடன் கைகோர்த்து நடித்தார் சூர்யா உடன் அஞ்சான், 24 மற்றும் விஜய் உடன் கத்தி, தெறி விக்ரம் உடன் பத்து என்றதுக்குள்ள தனுஷ் உடன் தங்கமகன் போன்ற படங்கள் இவருக்கு இங்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது. தமிழிலும் சரி தெலுங்கிலும் சரி இவர் படங்களில் வரிசையாக நடித்து வந்தார். இவர் நடிப்பில் தமிழில் வந்த யூ டர்ன் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
கடந்த மாதம் இவரது நடிப்பில் தமிழில் வெளியான "96" திரைப்படத்தின் ரீமேக்கான ஜானு திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களே கிடைத்தது. தற்போது ஜிம்மிற்கு சென்று படு பிஸியாக ஒர்க் அவுட் எல்லாம் செய்து வருகிறார் சமந்தா. சுமார் 40 கிலோ எடையுள்ள பளூவை தூக்கி அசத்தியுள்ளார் சமந்தா. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதற்கு முன் சீமராஜா படத்திற்காக இதே போல சிலம்பம் கற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











