அதிக சம்பளம் வாங்கும் சமந்தா... நயனுக்கு அப்புறம் இவங்களுக்கு தான்!
சென்னை : அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் சமந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
வெள்ளித்திரையை பொறுத்தவரை, நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து, அவர்களுடைய சம்பளமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையின் லிஸ்ட்டில் சமந்தாவின் பெயர் இடம்பிடித்துள்ளது. இவர் வாங்கும் சம்பளத்தைக் கேட்ட ரசிகர்கள் வாய்பிளந்து நிற்கின்றனர்.

சமந்தா
தென்னிந்திய ரசிகர்கள் மனதில் நடிகை சமந்தாவிற்கு என்றே தனி இடம் உண்டு. இவரின் அழகாலும், திறமையான நடிப்பாலும் பல ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது தமிழ் சினிமாவில் அரிது. அப்படி எழுதப்படாத இருந்த சட்டத்தை முறியடித்து தற்போது வரை கதாநாயகி கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார்.

காத்து வாக்குல இரண்டு காதல்
நடிகை சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. யசோதா , சகுந்தலம் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அவரை தேடி பல பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம். தனக்கு பிடித்த கதை கிடைத்ததும் பாலிவுட் பக்கம் செல்லும் ஐடியாவில் இருக்கிறார் சமந்தா.

நயன்தாராவுக்கு முதல் இடம்
சில வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா முதலிடத்தில் இருந்து வருகிறார். அவர் ஒரு படத்திற்கு சுமார் ஐந்து முதல் ஆறு கோடி ரூபாய் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் படங்கள் அதற்கு மேலே பல மடங்கு லாபத்தை ஈட்டித்தரும்.
Recommended Video

இத்தனை கோடி சம்பளமா?
தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் சமந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படத்தில் ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா என்ற ஐட்டம் பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்டு இருந்தார். அந்த ஒரு பாடலுக்கு மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தார் சமந்தா.


Click it and Unblock the Notifications











