நாக சைதன்யாவை தூக்கி எறிந்த சமந்தா.. குடிக்கும்போது தெரிந்துவிட்டது.. அது கன்ஃபார்ம்தான் போல
சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த சீரிஸில் சமந்தாவின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே அவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த வருடம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
விளம்பர படங்களில் நடித்து பிறகு சினிமாவுக்குள் வந்தவர் சமந்தா. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனது தடத்தை பதித்து அங்கும் தனது கொடியை பறக்கவிட்டார். அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்தார். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் அவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

பாதியில் முடிந்த திருமண வாழ்க்கை: ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரிவுக்கு பிறகு நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய் அளவில் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அதனை சமந்தா பெறுவதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு; மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். எனவே சினிமாவிலிருந்து விலகினார்.
மிகப்பெரிய தோல்வி படங்கள்: ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர்; சினிமாவுக்கு மீண்டும் வந்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதனையடுத்து மறுபடியும் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். இப்போது சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இதனை இயக்க; வருண் தவான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இதில் சமந்தாவின் நடிப்புக்கு குட் ரெஸ்பான்ஸே கிடைத்தது.
இரண்டாவது திருமணம்: இதற்கிடையே சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடந்த அந்தத் திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் திருமணத்துக்கு பிறகு சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலோடும், மகிழ்ச்சியோடும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள். சமீபத்தில்கூட இரண்டு பேரும் வெளிநாட்டுக்கு சென்ற புகைப்படமும், அங்கு நாக சைதன்யா கார் ரேஸ் பயிற்சி எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் நிலைமை: சூழல் இப்படி இருக்க சமந்தாவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க சமந்தா இயக்குநர் ராஜை காதலிப்பதாகவும் ஒரு தகவல் சமீபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பிக்கிள் பால் லீக்கில் சமந்தாவும், ராஜும் ஒன்றாக வந்ததை வைத்து இந்தப் பேச்சு ஆரம்பித்த சூழலில்; சாமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது காதல் பற்றிய போஸ்ட்டுகளை போட்டுவருகிறார்.
தூக்கி எறிந்த சமந்தா: சமந்தாவின் போஸ்ட்டுகளை பார்த்த ரசிகர்கள் காதலில் விழுந்துவிட்டாரோ என்று கேள்விகளை எழுப்பிவருகிறார்கள். இந்நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அவர் காக்டெயில் குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவரது வலது கையில் குத்தியிருந்த டாட்டூவை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த டாட்டூ நாக சைதன்யாவை காதலித்தபோது போட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஒருவழியா சைதன்யாவை சமந்தா மொத்தமாக தூக்கி எறிய ஆரம்பித்துவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











