சமந்தா இப்படி செய்திருக்க கூடாது… அதிர்ச்சியில் நாகசைத்தன்யாவின் குடும்பம் !

ஹைதராபாத் : நடிகை சமந்தாவும் நாகசைத்தன்யாவும் சேர்ந்து வாழ்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், சமந்தாவின் செயல் அதை தவிடுபொடியாக்கி உள்ளது.

நாகார்ஜூனின் மகன் நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

இவர்களது திருமணம் 2017ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் கோவாவில் கோலாகலமாக நடந்தது.

சமந்தா

சமந்தா

தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தா தனது திரைப்பயணத்தை 2010ம் ஆண்டில் தொடங்கி, டாப் நடிகை என பெயர் எடுத்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார்.

இருவரும் பிரிந்தனர்

இருவரும் பிரிந்தனர்

சமந்தாவும், நாகசைத்தன்யாவும் ஊரார் கண்படும் அளவுக்கு மனம் ஒத்த தம்பதிகளாகவே இருந்தனர். இவர்களில் அழகான வாழ்வில் புயல் வீசி இருவரையும் விவகாரத்து முடிவை எடுக்கவைத்துவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிவதாக கூட்டாக அறிவித்துவிட்டு பிரிந்தனர்.

பல வதந்திகள்

பல வதந்திகள்

பிரிந்ததற்கான காரணத்தை இருவரும் சொல்லாததால், சோஷியல் மீடியாவில் இவர்கள் இருவர் குறித்தும் வதந்திகள் காட்டுத்தீபோல பரவின. இதனால் மனவேதனையில் இருந்த சமந்தா நடிப்பில் கவனத்தை திசை திருப்பி பல திரைப்படங்களை படு ஜோராக நடித்து வருகிறார்.

பல படங்களில்

பல படங்களில்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல, யசோதா, சாகுந்தலம் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

என்ன சமந்தா இதெல்லாம்

என்ன சமந்தா இதெல்லாம்

இந்நிலையில், சமந்தா தனது திருமண புடவையை நாகசைத்தான்யாவின் குடும்பத்திடம் திரும்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நாகசைத்தான்யாவின் குடும்பம் பேர் அதிர்ச்சியில் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சமந்தாவின் இந்த செயல் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமந்தா நாக சைதன்யா தொடர்பான எதையும் தன்னுடன் வைத்திருக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டதாக சமந்தாவின் தோழிகள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X