நான் ஏன் அவ்வளவு மோசம்.. வெட்கமாக இருக்கிறது.. சமந்தா பளீச்சுனு இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் கலக்கிய அவர்; நாக சைதன்யாவுடனான பிரிவு, மையோசிடிஸ் நோய் உள்ளிட்டவைகளால் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அந்தவகையில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்த அவர் இப்போது சுபம் என்ற படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா முதலில் மாடலாக இருந்தவர். அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோல் செய்த அவர்; மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். அந்த இரண்டு படங்களும் சரியாக போகாவிட்டாலும் இரு படங்களிலும் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு பாடல்கள் ஹிட்டானதால் சமந்தா மீது வெளிச்சம் பாய தொடங்கியது.
கட கட வளர்ச்சி: அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். இதே நேரத்தில் தெலுங்கிலும் அவரது மார்க்கெட் உயர தொடங்கியடு. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடிக்க தொடங்கி தொடர்ந்து அங்கேயும் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கும் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்தது.

சூப்பரான திருமணம் டூ சுமாரான வாழ்க்கை: அந்தக் காதலுக்கு நாக சைதன்யா வீட்டில் சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் சூப்பராக கோவாவில் நடந்தது. திருமணத்துக்கு பின்பு சமந்தாவும் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அதற்கு சைதன்யாவின் சப்போர்ட்டும் இருந்தது. ஆனால் சில காலம் கழித்து நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதாக கூறப்பட்ட சூழலில்; இரண்டு பேரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அவர்களின் பிரிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மையோசிடிஸ் நோய்: சூழல் இப்படி இருக்க சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தததுதான் அவர்கள் தனி தனியாக வாழ்வதற்கு காரணம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் இரண்டு பேரும் அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவந்தார்கள். நோய் காரணமாக சாம் சிகிச்சைக்கு சென்றார். இதனால் திரைத்துறையிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்தார். பிறகு சிகிச்சையிலிருந்து மீண்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் வெளியான இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் கொடுத்தது. இருந்தாலும் நடித்த அவர் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்து வரவேற்பை பெற்றார்.
நாக சைதன்யா திருமணம்: இதற்கிடையே சமந்தாவை பிரிந்த சைதன்யா அடுத்ததாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் சென்ற ஆண்டுதான் நடந்து முடிந்தது. அவரது 2ஆம் திருமணத்தை பார்த்த சமந்தாவின் ரசிகர்களோ நீங்களும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். சமந்தாவோ 2ஆவது திருமணத்திலும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டார்.
சமந்தாவின் பேட்டி: இந்நிலையில் சுபம் என்ற படத்தை தயாரித்திருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நான் நடித்த முதல் இரண்டு படங்களை இப்போது நான் பார்த்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என யோசிக்கிறேன்" என்றார். அவர் அளித்திருக்கும் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











