ரொம்பவே நடுங்கினேன்.. மறுமுறையெல்லாம் செய்யமாட்டேன்.. அதிரடி காட்டிய சமந்தா
சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இவர் ஏற்கனவே சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா இன்னமும் சிங்கிளாகத்தான் இருக்கிறார். ஆனால் அவரும், இயக்குநரு ராஜும் காதலித்துவருவதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் சமந்தா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து கோலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்தா சமந்தா தெலுங்கிலும் நடித்தார். அப்படி தன்னுடைன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பணியாற்றியபோது நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் என மொத்த இரண்டு முறை அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அதற்கு சைதன்யாவும் தன்னுடைய சப்போர்ட்டை செய்திருந்தார்.
திடீரென இரண்டு பேருக்குள்ளும் பிரிவு: சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இரண்டு பேரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தார்கள். அந்தப் பிரிவுக்கு சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். பிரிவுக்கு பிறகு சமந்தா சிங்கிளாக இருந்தார். நாக சைதன்யாவோ பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலாவை காதலித்தார். பிறகு இந்தக் காதலுக்கும் சைதன்யா வீடு க்ரீன் சிக்னல் கொடுத்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி வைத்தது.

பிரமாண்ட திருமணம்: அதனையடுத்து இரண்டு பேருக்கும் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. அங்கிருக்கும் நாக சைதன்யாவின் தாத்தாவான நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு சோபிதா கழுத்தில் தாலி கட்டினார் அவர். சமந்தா போலவே சோபிதாவும் தன்னுடைய திருமணத்துக்கு பிறகு நடித்துவருகிறார். அதற்கும் சைதன்யாவும் அவரது குடும்பத்தினரும் முழு ஆதரவை கொடுத்துவருகிறார்கள்.
சமந்தா காதல்?: இதற்கிடையே சமந்தா இன்னமும் சிங்கிளாகத்தான் இருக்கிறார். அவரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில்; அதிலிருந்து நழுவிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட நிலைமையில் ஃபேமில் மேன், சிட்டாடல் ஹனி பன்னி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர்களில் ஒருவரான ராஜுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது ஒன்றாக வருவது அந்தப் பேச்சுக்கு வலிமை சேர்ப்பது போன்று இருக்கிறது.
சமந்தாவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார் சமந்த. அந்தப் பேட்டியில் அவர், "நான் ஒரு கவர்ச்சியான பெண் என்று வாழ்நாள் முழுவதும் நான் நினைத்ததே இல்லை. அதனை செய்து பார்க்க ஒரு வாய்ப்பாக இருந்ததுதான் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல். இதற்கு முன்பு நான் அந்த மாதிரி கவர்ச்சியாக நடனம் ஆடியதில்லை. எனவே அதனை நான் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். இதேபோல் நான் கண்டிப்பாக மறுமுறையெல்லாம் செய்யமாட்டேன்.அந்தப் பாடலின் வாய்ப்பு எனக்கு வந்தபோது ஆச்சரியம்தான் ஏற்பட்டது.
அப்படித்தான் நடிப்பேன்: எப்போதுமே நான் பாந்தமான, பக்கத்து வீட்டு பெண் போன்றுதான் நடிப்பேன்.எனவே என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லாம் அந்தப் பாடலுக்கு நடனமாட வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் எனக்கு பிடித்திருந்தது. இதனை ஒரு வாய்ப்பாக பார்த்தேன். பாடலின் முதல் ஷாட்டுக்கு முன்பு நான் கிட்டத்தட்ட 500 நடன கலைஞர்கள் முன்பு நடுங்கிக்கொண்டிருந்தேன். பதற்றமாகவும் இருந்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











