காலை, மாலை இரண்டு நேரமும் வருவார்.. அவர் எனக்கு ப்ரெண்ட் மட்டுமில்லை.. சமந்தா ஓபன் டாக்

சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இவர் ஏற்கனவே சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவரது இரண்டாவது திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் பிரமாண்டமாக நடந்தது. இதில் திரையுலகினர் சிலரும், இரு வீட்டாரும் கலந்துகொண்டார்கள். நாக சைதன்யா எப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரோ அதேபோல் சமந்தாவும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார்கள். ஆனால் அதுகுறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார் அவர். இந்நிலையில் அவர் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஏகப்பட்ட விஷயங்களை பேசினார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வெற்றி பெறுவது என்பது எப்போதாவது அரிதாகத்தான் நடக்கும். அந்த அரிதான நடிகைகளில் ஒருவர்தான் சமந்தா. முதலில் மாடலாக இருந்து விளம்பர படம் ஒன்றில் நடித்தார். அதற்கு பிறகு இயக்குநர் கௌதம் மேனனின் கவனத்தை பெற்ற அவர்; விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் நடித்தார். சிறிய ரோலை ஏற்றிருந்தாலும் அட்டகாசமாக நடித்து பலரையும் ஈர்த்த அவருக்கு; உடனடியாக கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அவர்; குறுகிய காலத்தில் டாப் ஹீரோயின்கள் வரிசையில் இணைந்தார்.

Samantha has spoken emotionally about her time with the disease

நாக சைதன்யாவுடன் திருமணம்: பொதுவாக தங்களது கரியர் பீக்கில் இருக்கும்போது எந்த நடிகையும் திருமணம் செய்துகொள்ள விரும்பமாட்டார். ஆனால் சமந்தாவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவோடு காதல் உருவானது. அந்தக் காதலுக்கு வீட்டு தரப்பிலிருந்து பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் என மொத்த இரண்டு முறை அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். அப்படி அவர் ஃபேமிலி மேன் உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். நாக சைதன்யாவும் தன்னுடைய ஆதரவை பலமாகவே கொடுத்துவந்தார்.

முளைத்த பிரச்னை: ஆனால் ஒருகட்டத்தில் சமந்தா நடிப்பது நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும்; அதனால் உடனடியாக நடிப்பதை நிறுத்த கோரிக்கை வைக்கப்பட்டது; ஆனால் சமந்தா முற்றிலுமாக அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வீட்டுக்குள் முதலில் பிரச்னை முளைக்க ஆரம்பித்தது என்றும் கிசுகிசுக்கள் பரவின. சமந்தாவும் தொடர்ந்து நடிப்பதில் கவனத்தை செலுத்திவந்தார். இப்படிப்பட்ட நிலைமையில், சமந்தாவும், நாக சைதன்யாவும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தார்கள். அந்தப் பிரிவுக்கு சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. அதேபோல் மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்றும் இன்னொரு தரப்பினர் கூறினார்கள்.

ஜீவனாம்சத்துக்கு நோ: அதுமட்டுமின்றி விவாகரத்தின்போது சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய்வரை ஜீவனாம்சமாக கொடுப்பதற்கு நாக சைதன்யா குடும்பம் தயாராக இருந்தது என்றும்; அதனை சமந்தாதான் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு சமந்தா சிங்கிளாக இருந்தார். நாக சைதன்யாவோ பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதாவை காதலித்தார். பிறகு இந்தக் காதலுக்கும் நாகார்ஜுனா தரப்பு க்ரீன் சிக்னல் கொடுத்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி வைத்தது. அதேபோல் திருமணத்தையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

கடந்த வருடம் நடந்த திருமணம்: அதன்படி சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. அங்கிருக்கும் நாக சைதன்யாவின் தாத்தாவான நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு சோபிதா கழுத்தில் தாலி கட்டினார் அவர். இரவு 8 மணிக்கு சரியாக அவர் சோபிதாவை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தில் இரு வீட்டார், நண்பர்கள் தவிர்த்து திரையுலகிலிருந்து சிலரும் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இப்போது அவர்களது வாழ்க்கை சுமூகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

Samantha has spoken emotionally about her time with the disease

அடுத்தடுத்த படங்கள்: இதற்கிடையே சமந்தா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் சிட்டாடல் வெப் சிரீஸில் அவரது நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது. அதிலும் சமந்தாவின் ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்பியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி லிப் லாக் சீனிலும் நடித்திருந்தார் சாம். சிட்டாடலில் தனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதேபோல் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் கோரிக்கையையும் அவரது ரசிகர்கள் முன் வைத்துவருகிறார்கள். ஆனால் சாமோ அதுகுறித்து எதுவும் பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

சமந்தாவின் பேச்சு: இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "என்னுடைய சினிமா கரியரில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதேபோல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதியும் இருக்கிறது. முக்கியமாக இந்தப் பயணத்தில் என்னுடைய கடின உழைப்பும் இருக்கிறது. கடின உழைப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கடவுள் கொடுத்த பரிசாகவும் இதனை நான் பார்க்கிறேன்.என்னுடைய சினிமா கரியரில் பல விஷயங்கள் நினைவுகூரும்படியாகத்தான் இருக்கிறது. நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சில விஷயங்கள் எனக்கு தெரியாமலும் நடந்திருக்கிறது. பல்லாவரம் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ரொம்பவே கேவலமாக இருக்கும். அதை வெளியே சொன்னால் நீங்கள் எல்லாம் பயப்படுவீர்கள்.

அவர் எனக்கு நண்பர் மட்டுமில்லை: என் மீது ரசிகர்கள் காட்டும் அன்புதான் என்னுடைய சந்தோஷம். அவர்களை பார்க்கும்போது அவ்வளவு எனர்ஜி வருகிறது. இத்தனை பெரிய காதலை என் மீது வைத்திருக்கிறார்கள். இது கடவுளுடைய ஆசீர்வாதம். நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாமா வேண்டாம் என்பதை நீங்களே (ரசிகர்கள்) சொல்லிவிடுங்கள். இரண்டாவது திருமணம் செய்யக்கூடாதா?.. அப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன். அது தவறு.மாஸ்கோவின் காவிரி படத்தின் நாயகன் ராகுல் ரவீந்திரன் பற்றி சொல்ல வேண்டும். நான் நோய்வாய்ப்பட்டு ஒன்றரை வருடங்களாக இருந்தேன். அந்த சமயத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் அவர் நேரில் வந்து என்னை சந்தித்து ஆறுதல் கூறுவார். அதனால்தான் அந்த கடினமான காலகட்டத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. நான் அதை நட்பு என்று மட்டும் சொல்லமாட்டேன். அவர் எனக்கு சகோதரர் மாதிரி. எனது குடும்பத்தில் ஒருவர் அவர். என்னுடைய ரத்தம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X