யப்பா எவ்வளவு பெரிய மனசு.. முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவுக்கு சமந்தா செய்த உதவி என்னவென்று தெரியுமா?
சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார். சூழல் இப்படி இருக்க தனது முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவுக்கு சமந்தா செய்த உதவி குறித்து ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.
முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

பிஸியான சமந்தா: திருமண முறிவுக்கு பிறகு தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவந்தார் சமந்தா. அந்தவகையில் தமிழில் அவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்தப் பாடலில் நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டானார் சமந்தா.
மையோசிடிஸ்: சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மையோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
நாக சைதன்யா நிச்சயதார்த்தம்: இந்தச் சூழலில் சமீபத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஒருபக்கம் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்; மறுபக்கமோ சமந்தா விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையையும் ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சமந்தா அதுகுறித்து இப்போதுவரை மௌனம் காத்துவருகிறார்.
சமந்தா செய்த உதவி: இந்நிலையில் சமூக வலைதளங்களில் சமந்தாவின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாதான் தொகுத்து வழங்கிவருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் நான்காவது சீசனையும் அவர் தொகுத்து வழங்கினார். ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு ஷூட்டிங் இருந்ததன் காரணமாக இடையில் சில நாட்கள் அவரால் தொகுத்து வழங்க முடியவில்லை. அதனையடுத்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சமந்தா பிக்பாஸ் 4ஐ தொகுத்து வழங்கினார்.
அந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து சமந்தாவுக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்க. அந்த சமயத்தில் சமந்தாவும் சினிமாவில் பிஸியாகத்தான் இருந்தார். ஆனால் தனது மாமனாருக்காக இந்த பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். அவங்க முழு ஒற்றுமையோடுதான் நாகார்ஜுனா குடும்பத்தில் இருந்திருக்காங்க இடையில் என்ன பிரச்னை நடந்ததோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











