த்ரிஷாவை ஈசியா பீட் பண்ணிடுவேன்: சமந்தா
சென்னை: நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தை விடச் சிறந்தது என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையானவர் சமந்தா. அதன் பிறகு அவர் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தார். சொல்லப் போனால் கௌதம் மேனனின் ஆஸ்தான நாயகிவிட்டார்.
தெலுங்கு பக்கம் போன சமந்தாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தூக்குடு படத்தில் நடித்த அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதன் பிறகு அம்மணி தெலுங்கில் ரொம்பவே பிசியாகிவிட்டார். இருப்பினும் அவ்வப்போது கோலிவுட் பக்கமும் வந்து தலையைக் காட்டிவி்ட்டு போவார். இந்நிலையில் தான் அவர் கௌதம் மேனனின் இயக்கத்தில் ஜீவாவுடன் சேர்ந்து நீ தானே என் பொன்வசந்தம் படித்தில் நடித்துள்ளார்.

ஜீவாவின் நித்யா
நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் மக்கள் மனதில் நிற்கும் நித்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா.

த்ரிஷா கதாபாத்திரம் என்னோட பெரிசில்ல
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்த ஜெசி கதாபாத்திரத்தை விட நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் வரும் தனது கதாபாத்திரமான நித்யா தான் பெரிசு என்கிறார் சமந்தா. மேலும் நித்யா ஏதோ நம் பக்கத்து வீட்டு பெண் போல் தோன்றுவாராம்.

ஜீவாவோட செம காமெடி
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜீவாவோட செம காமெடியாக இருந்தது என்றார் சமந்தா. அவர் என்னதான் காமெடி பண்ணினாலும் இயக்குனர் ஆக்ஷன் என்று கூறிவிட்டால் உடனே சீரியஸாகிவிடுவார் என்றார்.

ஒளிமயமான எதிர்காலம்
உடல் நலக்குறைவு காரணமாக மணி ரத்னத்தின் கடல் மற்றும் ஷங்கரின் ஐ ஆகிய படங்களில் சமந்தாவால் நடிக்க முடியவில்லை. இந்நிலையில் வரும் 2013ம் ஆண்டு தனக்கு ஒளிமயமான ஆண்டாக இருக்கும் என்று சமந்தா நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











