டிராகன் பட ஹீரோயின் படத்தில் சமந்தா... என்ன படம் தெரியுமா?
சென்னை: பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தவர் சமந்தா. அதற்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ் என விஜய், பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, சூர்யா ஆகிய டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருமண விவகாரத்துக்கு பிறகு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். இதனிடையே பிரபல நடிகையின் படத்தில் சமந்தா கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேமியோ ரோல்: நந்தினி ரெட்டி இயக்கிய ஜபர்தஸ்த், ஓ பேபி படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதனைத்தொடர்ந்து நந்தினி இயக்கத்தில் உருவாகும் பங்காரம் என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமந்தா அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுபமா பரதா என்ற படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார் இப்படத்தில் தான் அவர் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
முத்தக்காட்சி: பிரமேம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமாவிற்கு அவரது தலைமுடியை பார்த்து ரசிகர்கள் கூட்டம் கூடியது. அதன்பின்பு தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்திற்கு பின்பு தெலுங்கு பக்கம் சென்ற அனுபமா கார்த்திகேயா 2, 18 பேஜஸ், தில்லு ஸ்கொயர் படத்தில் நடித்து பிரபலம் ஆனார். நானியுடன் கிருஷ்ணராஜூன யுத்தம் படத்தில் நடித்திருந்தார். அதுவும் அனுபமா நடிக்கும் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ முத்தக்காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். லிப்லாக் காட்சிக்கு என்று தனித்தொகை வாங்கிடுவாராம். தில்லு ஸ்கொயர், 18 பேஜஸ் படத்தில் அவர் முத்த காட்சியை பார்த்து இளைஞர்களுக்கே பீவர் வந்துவிட்டதாம்.

டிராகன் வெற்றி: தில்லு ஸ்கொயர் படத்தின் ஹீரோவை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்பு பொய் என செய்திகள் வந்ததால் ரசிகர்கள் மெளனமாயினர். இதன் பின்னர், டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. அனுபமாவை மறந்து எல்லோரும் கீர்த்தி என்றே அழைக்க தொடங்கியுள்ளனர். இருப்பினும் டிராகன் படத்தில் கயாடு லோஹருக்கு கொடுத்த முக்கியத்துவம் அனுபமாவுக்கு இல்லை என்ற கோபத்தில் அனுபமா இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், டிராகன் படத்தின் வெற்றி விழாவில் அவர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பரதா: ஹீரோயினாக நடித்து வந்த அனுபமா திடீரென கதநாயகியாக களம் இறங்கியுள்ள படம் தான் பரதா. ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். கிராமத்தின் பின்னணியில் இருந்து வரும் இரண்டு பெண்களை பற்றிய கதையாக பரதா படம் உள்ளது. கிராமங்களில் பெண்கள் பரதா அணிவதையும், பெண்ணடிமைத்தனத்தையும் பற்றி இப்படம் பேசுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
பெண்களை மையப்படுத்தி உருவாகும் படம் என்பதால் சமந்தா கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டாரம். மேலும், அனுபாமாவும் சந்தாவும் ஏற்கனவே அ, ஆ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











