பிக்பாஸில் சமந்தா.. யப்பா வேற லெவலா ஃபன் பண்றாங்களே.. செம க்யூட்டா இருக்காங்க
சென்னை: நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் கமிட்டான படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சமந்தா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது உடன் நடித்த நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்கள். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் திருமணம் ஜோராக நடந்தது.

விவாகரத்து: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சமந்தாவின் நடிப்பு பயணத்தை நாகார்ஜுனா குடும்பம் விரும்பாததால் சில பிரச்னைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள். அவர்களது விவாகரத்து அறிவிப்பு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் ஷாக்கை கொடுத்தது.
இரண்டாவது திருமணம்: இதனையடுத்து மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இப்படி சைதன்யாவும், சமந்தாவும் தத்தமது வழிகளில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா அவதூறாக பேசினார்.
அமைச்சரின் சேட்டை: அதாவது, 'கேடிஆருக்கு சமந்தா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் மீது ஆசைப்பட்டார். அதற்கு நாகார்ஜுனாவும் ஒத்துக்கொண்டார். அவர்கள் இருவரது விவாகரத்துக்கு இதுதான் காரணம். கேடிஆரால் பல சினிமா நடிகைகள் விரைவில் திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்கள்' என்று சொன்னார். அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவும் காட்டமான பதிலடியை கொடுத்தார்கள். அவர் மட்டுமின்றி ஜூனியர் என்.டி.ஆர், நாகார்ஜுனா, அமலா என ஏராளமானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சமந்தா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். அவர் இடையில் ஒரு சீசனின்போது ஷூட்டிங்கிற்கு சென்றுவிட பிக்பாஸ் ஆங்கர் பொறுப்பை சமந்தா ஏற்றிருந்தார். அந்த வீடியோ இப்போது திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அட சமந்தா செம க்யூட்டா போட்டியாளர்களிடம் பேசுகிறாரே என்று கமெண்ட்ஸும் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











