சரக்கு விளம்பர வீடியோவில் கவர்ச்சி உடையில் சமந்தா... புது சிக்கல் ஆரம்பமா ?

சென்னை : சரக்கு விளம்பரத்திற்காக படுகவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் சமந்தா.

தென்னிந்தியாவில் டாப் நடிகையாக இருந்து வரும் சமந்தாவிற்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புக்கள் வர துவங்கி உள்ளன. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிக்கும் படங்களை விட, கணவர் நாக சைதன்யாவுடனான விவாகரத்தை அறிவித்த பிறகு, சமந்தா என்ன செய்தாலும் அது பரபரப்பான செய்தி ஆகி விடுகிறது.

 கவனத்தை ஈர்க்கும் சமந்தா

கவனத்தை ஈர்க்கும் சமந்தா

தொடர்ந்து சமந்தா பற்றிய செய்திகள் மீடியாக்களில் வந்து கொண்டிருக்கிறது. சமந்தா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, சோஷியல் மீடியாவில் பதிவிடும் போஸ்ட் என அனைத்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் வசூலை அள்ளி குவித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரைஸ் படத்தில் அயிட்டம் சாங்கிற்கு ஆடி பரபரப்பை கிளப்பினார். இதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்திலும் அயிட்டம் சாங் ஆட உள்ளதாக கூறப்பட்டது.

எதிர்ப்பை பெற்ற அயிட்டம் சாங்

எதிர்ப்பை பெற்ற அயிட்டம் சாங்

புஷ்பா பட பாடலே சர்ச்சை, எதிர்ப்பை கிளப்பிய நிலையில், தற்போது சரக்கு விளம்பர வீடியோவில் படு கவர்ச்சியான உடையணிந்து நடித்துள்ளார் சமந்தா. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!
போதை விளம்பரங்களில் நடிகர்கள்

போதை விளம்பரங்களில் நடிகர்கள்

அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், அஜய் தேவ்கன், மகேஷ் பாபு என டாப் ஹீரோக்கள் பலரும் தடை செய்யப்பட்ட பான் மசாலா விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருவதற்கு எதிராக சமூக நல அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. ரசிகர்களும் இவர்களை கிண்டல் செய்து மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள். இதனால் பல நடிகர்கள் பான் மசாலா போன்ற போதை பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பதை கைவிட்டு வருகின்றனர். தமிழிலும் ரஜினி உள்ளிட்ட உச்ச நடிகர்கள் தங்களின் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை கைவிட்டு வருகின்றனர்.

நடிகைகள் ஆரம்பிச்சுட்டாங்களே

நடிகைகள் ஆரம்பிச்சுட்டாங்களே

சினிமாக்களில் சிகரெட், மது அருந்தும் காட்சிகள் வரும் போது கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என சொல்கிறது அரசு விதிமுறைகள். ஆனால் சமீப காலமாக நடிகைகள் பலர் சரக்கு கிளாசுடன் இருக்கும் விளம்பரங்களை தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் ப்ரோமோட் செய்து வருகிறார்கள். ராய் லட்சுமி, அமைரா தஸ்தூர், ஹன்சிகா,காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் இது போன்ற போட்டோக்களை வெளியிட்டு எதிர்ப்பை சம்பாதித்தனர்.

சரக்கு விளம்பரத்தில் சமந்தா

நடிகைகளின் சோஷியல் மீடியா பக்கங்களில் இருக்கும் ஃபாலோவர்களை பொறுத்து, விளம்பர நிறுவனங்கள் அவர்களுக்கு பணமும் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் டாப் நடிகையான சமந்தா, சரக்கு விளம்பர வீடியோவில் கவர்ச்சி அடையில் தோன்றி இருப்பது பலத்த எதிர்ப்பை கிளப்பி உள்ளது. ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கி உள்ள சமந்தாவிற்கு இது புதிய சிக்கலாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X