Samantha - சமந்தா எடுக்கும் புதிய சிகிச்சை இதுவா?.. விரைவில் குணமாக வேண்டி எடுத்த அதிரடி முடிவு
சென்னை: Samantha (சமந்தா) தனக்கு ஏற்பட்டிருக்கும் நோயிலிருந்து விரைவில் குணமடைவதற்கு சமந்தா புதிய சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா அவரை திடீரென்று பிரிந்தார். அதன் பிறகு புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கென்று ரசிகர்களை அதிகப்படுத்திக்கொண்டார். மேலும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டானார். இதன் காரணமாக சமந்தா மிகப்பெரிய ரவுண்டு வரப்போகிறார் என அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருந்தனர்.

மையோசிடிஸ் நோய்: இந்தச் சூழலில் சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் நோய் வந்தது. அரிய வகை நோய் என்பதால் அவர் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். ஒருவழியாக சிகிச்சையை முடித்துக்கொண்டு நல்லபடியாக மீண்டு வந்தார். நோயிலிருந்து மீண்டு வந்த அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் சமீபத்தில் வெளியானது. குஷி படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
சறுக்கிய சாகுந்தலம்: கடந்த வாரம் ரிலீஸான சாகுந்தலம் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதுவரை அந்தப் படம் 10 கோடி ரூபாய்கூட வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் கார்ட்டூன் காட்சிகளை பார்ப்பது போல் இருப்பதாகவும், கதையே ரொம்ப வீக்காக இருப்பதாகவும் ரசிகர்கள் வெளிப்படையாக கூறினர்.
புரோமோஷனில் சமந்தா: இதற்கிடையே சாகுந்தலம் படத்தின் புரோமோஷன்போது சமந்தா கொஞ்சம் எமோஷனலாகவே காணப்பட்டார். மேலும் சில மேடைகளில் கண்ணீர் விட்டு அழவும் செய்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு தங்களது ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்தனர். அதேசமயம் சமந்தா மேடைக்கு மேடை இப்படி அழுவதை நிறுத்த வேண்டும் என ஒரு சிலர் பேச தொடங்கினர்.

வெப் சீரிஸில் சமந்தா: இதற்கிடையே சாகுந்தலம் படம் ப்ளாப் ஆனாலும் அவர் நடித்த குஷி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதேபோல் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனிலும் அவர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த வெப் சீரிஸை ஃபேமிலி மேன், ஃபர்ஸி வெப் சீரிஸ்களை இயக்கி புகழடைந்த ராஜ்&டிகே இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா ஏற்றிருந்த கதாபாத்திரத்தைத்தான் இந்திய வெர்ஷனில் சமந்தா ஏற்கவிருக்கிறார்.
சமந்தாவின் புதிய சிகிச்சை: இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து விரைவில் மீள்வதற்கு சமந்தா ஐஸ் பாத் தெரபி எடுத்திருக்கிறார். அதாவது, குளியல் தொட்டி முழுவதும் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதன் மூலம்; அதாவது 10 நிமிடங்கள் வரை முழுமையாக மூழ்கி எழுவது மூலம் தசை சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் சில ஆட்டோ இம்யூன் குறைபாடுகளில் இருந்து மீளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதால் இதில் சமந்தா இப்போது ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











