சமந்தா என்னோட ரசிகை... ஸ்ருதி என்னோட ப்ரெண்ட்... அஞ்சலி அட்டாக்!
நடிகைகளுக்குள் எந்த போட்டியோ, பொறாமையோ இல்லை... நானும் ஸ்ருதி ஹாசனும் பெஸ்ட் ப்ரெண்ட் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
அழகு சமந்தா அஞ்சலியின் ரசிகையாம். இதனால் இரண்டு கதாநாயாகிகள் கதாபாத்திரம் என்றால் ஆர்வத்துடன் நடிப்பதாக கூறியுள்ளார் அஞ்சலி.
வத்திக்குச்சி ரிலீஸ் பூரிப்பில் இருக்கும் அஞ்சலி அவசரம் அவசரமாக அளித்த பேட்டியில் இருந்து சில துளிகள் உங்களுக்காக.

வத்திக்குச்சி செம ஹாட்
வத்திக்குச்சி படத்தில் என்னோட டேலண்டை நிரூபித்திருக்கிறேன். நல்ல பெயர் வாங்கித்தரும் படம் அது.

ஸ்ருதி என்னோட ப்ரெண்ட்
தெலுங்கு படத்தில் இரண்டு கதாநாயகிகளுக்கு சரியான போட்டி இருக்கும். ஸ்ருதியுடன் சேர்ந்து நடிக்கிறேன். இருவரும் நல்ல தோழிகள்.

கமல் மகள் பந்தா இல்லை
ஸ்ருதி, நடிகர் கமலின் மகள் என்ற பந்தா இல்லாமல் பழகுகிறார். அவரிடம் நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கலாம்.

சமந்தா என்னோட ரசிகை
சமந்தா உடன் சண்டை என்று எழுதுகின்றனர். அவரே ஒரு பேட்டியில் என்னோட ரசிகை என்று கூறியிருக்கிறார்.

கிசுகிசுவுக்கு அஞ்ச மாட்டேன்
இப்போ செய்தியை விட சினிமா கிசு கிசுதான் அதிகமா வருது. அதுக்கு பீல் பண்ணக்கூட நேரமில்லை பிஸி ஆயிட்டேன்.


Click it and Unblock the Notifications











