விஷாலுடன் நடித்த பிறகு போனை பார்த்தால் பேயை பார்த்தது போன்று பயப்படும் சமந்தா

By Siva

Recommended Video

அந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. - விஷால் அறிவிப்பு

சென்னை: விஷாலுடன் சேர்ந்து இரும்புத்திரை படத்தில் நடித்த பிறகு சமந்தா செல்போனை பார்த்தால் பேயை பார்த்தது போன்று பயப்படுகிறாராம்.

புதுமுகம் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் படம் பற்றி சமந்தா கூறியதாவது,

கதை

கதை

நான் பொதுவாக புதுமுகங்களின் படத்தில் நடிக்க மாட்டேன். ஆனால் மித்ரன் சொன்ன கதையை கேட்டு வியப்பாக இருந்தது. இன்டர்நெட்டால் இவ்வளவு பிரச்சனை ஏற்படுமா என்று பயமே வந்துவிட்டது.

பயம்

பயம்

இரும்புத்திரை கதையை கேட்ட பிறகு செல்போனை தொடவே பயந்து வருகிறது. இன்டர்நெட் மூலம் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும், நம் பிரைவசி எப்படி கசிகிறது என்று அழகாக கூறும் படம் இரும்புத்திரை.

இயக்குனர்

இயக்குனர்

மித்ரன் பணியாற்றிய விதத்தை பார்த்தால் அவர் புதுமுகம் என்றே கூற முடியாது. அவர் கதை சொன்ன விதமே என்னை இம்பிரஸ் செய்துவிட்டது. இன்டர்நெட்டால் வரும் பிரச்சனைகள் எதுவும் எனக்கு நிஜத்தில் நடக்காதது நிம்மதி அளிக்கிறது.

பிரச்சனை

பிரச்சனை

என் நண்பர்கள் சிலர் இன்டர்நெட் மோசடிக்கு ஆளாகி லட்சக் கணக்கில் பணத்தை ஏமாந்திருக்கிறார்கள். இன்டர்நெட்டை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.

அர்ஜுன்

அர்ஜுன்

விஷால், அர்ஜுன் ஆகிய இருவருமே ஸ்டைலிஷ் ஹீரோக்கள். அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நடித்ததில் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X