Samantha: உடம்பில் எந்த பிரச்னையுமில்லை.. 2வது திருமணத்துக்குப் பிறகு செம ஸ்லிம்மான சமந்தா!
சென்னை: நடிகை சமந்தாவுக்கு மயோசைடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உடலளவிலும் மனதளவிலும் மிகப்பெரிய வலியையும் வேதனையும் எதிர்கொண்டார். ஆனால், தொடர்ந்து ஜிம்முக்குச் சென்று தனது ஆரோக்கியத்தை மேம்படுத்தியே தீருவேன் என போராடிய அவர் தற்போது செம ஃபிட்டாகவும் க்யூட்டாகவும் மாறியுள்ளார்.
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குநர் ராஜ் நிடிமோரு தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், கணவரை பிரிந்து உடல் உபாதைகளுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமந்தாவுக்கு அவர் காட்டிய ஆறுதல் காரணமாகத்தான் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

மா இன்டி பங்காரம் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா நடித்து வரும் நிலையில், அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அடிக்கடி அவர் வெளியிடும் ஜிம் வீடியோக்கள் மூலம் புரிந்துக் கொள்ள முடிகிறது.
நயன்தாராவுடன் படம்: தமிழில் நடிகை சமந்தா கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், தமிழ் சினிமாவில் சமந்தாவுக்கு பெரிதாக எந்தவொரு படமும் கிடைக்கவில்லை. இந்தியில் நடிக்க முயற்சி செய்த சமந்தாவுக்கு பாலிவுட்டில் வெப்சீரிஸை தாண்டி பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் மா இன்டி பங்காரம் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் சமந்தா.
வெறித்தனமாக புஷ் அப்ஸ்: உடலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சகுந்தலம் படத்தின் புரொமோஷனல் நிகழ்ச்சியில் எல்லாம் கண் கலங்கி சமந்தா அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சமந்தாவின் அழகே போய் விட்டது என்றும் கண்ணாடி எல்லாம் மாட்டிக் கொண்டு பாட்டி மாதிரி இருக்காரே என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. ஆனால், திரும்பி கம்பேக் கொடுக்கிறேன் என்பது போல நடிகை சமந்தா வெறித்தனமாக புஷ் அப்ஸ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 2வது திருமணத்துக்குப் பிறகு சமந்தா மீண்டும் புத்தணர்ச்சியாக காணப்படுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எம்மி ஒயிட் எனும் ஜிம் டிரைனர் கொடுத்த சவாலை ஏற்று சமந்தா இந்த புஷ் அப்ஸை பயங்கரமாக செய்துள்ளார்.
த்ரிஷாவும் ஒர்க்கவுட்: சமீபத்தில், துபாயில் நயன்தாரா, சார்மி கவுர் உள்ளிட்ட நடிகைகளை சந்தித்த த்ரிஷா ஒர்க்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்திருந்தார். வயதானாலும் நல்ல நடிகைகளால் தொடர்ந்து ஹீரோக்களை போல நடிக்க முடியும் என இவர்கள் எல்லாம் நிரூபித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











