விஜயகாந்த் போன்று அதிரடி காட்டும் சமந்தா.. இந்தியாவிலேயே முதல் முறையாம்.. குவியும் வாழ்த்து!
சென்னை: சினிமா திரையுலகில் சம்பளம் என்பது ஹீரோக்களை காட்டிலும், ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது படத்தின் வெற்றியை பொறுத்தே அமைகிறது. இந்நிலையில், நடிகைகளுக்கான சம்பள விசயத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக சமந்தா எடுத்துள்ள முயற்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
100 கோடி சம்பளம்: விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தற்போது 100 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று வருகின்றனர். இவர்கள் நடித்த படம் வெற்றியோ தோல்வியோ சம்பளம் விசயத்தில் கராராக இருக்கின்றனர். ஆனால், நடிகைகளுக்கு அப்படியில்லை ஒரு படத்தின் வெற்றியை தொடர்ந்தே நடிகையின் மார்க்கெட் உயரும் அதற்கு ஏற்றவாறுதான் சம்பளத்தையும் உயர்த்துகின்றனர். டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, சமந்தா, திரிஷா ஆகியோரின் சம்பளம் இன்னும் 20 கோடியை தாண்டவில்லை. நடிகர்களைப் போல் நடிகைகளுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதுவரை பேச்சுவார்த்தையாக மட்டுமே இருக்கிறது.

தயாரிப்பு: நடிகை சமந்தா கடந்த 2023இல் திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் முதல் படமாக பங்காரம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சமந்தா லீட் ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து ஜபர்திஷ் மற்றும் ஓ பேபி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நந்தினி ரெட்டி தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்: திரையுலகில் 90களில் 1 கோடி பெற்ற நடிகைகள் என்று லிஸ்ட் போட்டால் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் உள்ளனர். ஆனால், நடிகர்கள் 3 படம் ஹிட் கொடுத்த பிறகு சம்பளத்தை 3 மடங்கு உயர்த்துகின்றனர். அமரன் படத்திற்கு பிறகு சாய் பல்லவி ரூ.6 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. நம்ர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா படத்தை பொறுத்து 3 கோடி முதல் 12 வரை சம்பளம் பெறுகிறார். பாகுபலி நடிகை அனுஷ்கா 7 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

இந்தியாவின் கிரஷ் என அழைக்கப்பட்ட ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் 10 கோடி வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. சாவா படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா ரூ.3 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
அதிரடி காட்டிய சமந்தா: விவாகரத்து, அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் பாதிப்புகளுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா தற்போது இந்தி வெப் தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்காரம் பட இயக்குநர் நந்தினி ரெட்டி, சமந்தா பாலின பாகுபாடின்றி சம்பளம் வழங்குகிறார். இந்திய சினிமாவிலேயே யாரும் செய்யாத ஒன்றை அவர் செய்து வருகிறார். அவர் எடுத்திருக்கும் முயற்சியை பாராட்ட வேண்டும். மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும் என்பதை சமந்தா நிகழ்த்தி காட்டி வருகிறார். இந்த தகவலை அறிந்த திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் போன்று அதிரடியான முடிவை சமந்தா எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











