மாடியில் இருந்து குதித்த சமந்தா...வைரலாகும் ஸ்டன்ட் வீடியோ
ஐதராபாத் : ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பினாலும் மறுபக்கம் சமந்தாவின் நடிப்பிற்காக பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது ஃபேமிலி மேன் 2. இதில் சமந்தா நடித்த ராஜி என்ற ஈழ தமிழ் போராளி கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட சமந்தா நடித்த முதல் படம் இது தான். இந்த படம் சமீபத்தில் தான் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த வெப் சீரிசில் ஷாரிப் ஹஸ்மி, பிரியாமணி, தலிப் தஹில், ஷாரத் கேல்கர், தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Recommended Video
இவர்களுடன் சமந்தா, மனோஜ் பாஜ்பேயி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் அதிகபட்ச ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பல காட்சிகளில் சமந்தா டூப் போடாமல் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.
சமீபத்தில் திரைக்கு பின்னால் நடந்த சண்டைக்காட்சிகளின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த சமந்தா, தனக்கு ஸ்டன்ட் பயிற்சி அளித்த யானிக் பென்னிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
தற்போது, ஃபேம்லிமேன் 2 படத்தில் நடித்திருந்த ஷாரிப், மாடியில் இருந்து குதித்து ஸ்டன்ட் காட்சிகளில் அதிரடி காட்டிய சமந்தாவின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிக ரிஸ்க் எடுத்து சமந்தா நடித்துள்ள இந்த சண்டைக்காட்சிகளை பலரும் பாராட்டி உள்ளனர். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











