சமந்தாவை பார்த்து அந்த கேள்வியா.. மாட்டிக்கொண்ட முன்னாள் கணவர்.. நச்னு பதிலடி தந்த நடிகை
சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி இன்று உலகளவில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் சமந்தா. மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்துள்ள மீண்டுள்ள இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்தியில் ஒரு வெப் தொடரிலும், தெலுங்கில் பெண்களை மையப்படுத்தி உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆரம்பக் கட்டத்தில் பல தோல்விப் படங்களைச் சந்தித்திருந்தாலும், மனத் துணிவுடன் அதை எதிர்கொண்டு, தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய விதம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமந்தாவிற்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர், ஆனால் அவர்களிடம் எதற்காக சமந்தாவைப் பிடிக்கிறது? என்று கேட்டால் உடனே அவரது மன தைரியம் என பதிலாக வரும். மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி தற்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார் சமந்தா. அவர், தனது வாழ்வில் பல சோதனைகளை கடந்து புன்னகையுடன் வாழ்ந்து வருகிறார்.

எமோஷனலாக பேசிய சமந்தா: கடந்த சில நாட்களுக்கு பின்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவை பார்த்ததும் ரசிகர்கள் அன்போடு அவரிடம் ஐ லவ் யூ என்று கூறினர். அதற்கு அவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஐ லவ் யூ டூ என தெரிவித்தார். பின்னர், ஒருவர் ஐ லவ் மம்மி என்றது சிரித்துகொண்டே லவ் யூ டூ மகனே என பதில் அளித்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, "கடந்த 2 ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை, என் படங்களும் பெரிய ஹிட் ஆகவில்லை. இருப்பினும் ரசிகர்கள் இந்த அளவிற்கு என் மீது அன்பு வைத்திருப்பது என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்றும் தெரியவில்லை" என கண்கலங்கி பேசினார். அவரது பதில் பலரையும் வியப்படைய செய்தது.
உத்வேகம் தருகிறார்: சமந்தாவை பற்றி வரும் விமர்சனங்கள், வதந்திகளை எப்படி கையாள்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை தரும். ஆனால், அவர் எந்த எதிர்மறையான நிலையிலும், அவருடைய தைரியமான பதிலால் சிறந்தவராகத் திகழ்கிறார். அவரது வாழ்க்கை பயணம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது. திரையுலகில் பல பெண்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அதேபோன்று சமீப காலமாக பேஷனில் கலக்கி வரும் சமந்தா அடிக்கடி அட்டகாசமான போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை கவர்கிறார். அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை உத்வேகப்படுத்தும் வாக்கியங்களுடன் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்திருக்கிறார்.

உங்களை நம்புங்கள்: சமூகவலைதளத்தில் சமந்தா பதிவிட்டிருக்கும் போஸ்டில், உங்களை நம்புங்கள்.இன்று இந்த நாளை சுயமரியாதையோடு வாழ பழகிக் கொள்கிறேன். எந்த நேரத்திலும் என்னை நானே பக்குவப்படுத்திக்கொள்கிறேன். அமைதி கொள் மனமே. அமைதி கொள். முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். தைரியமாக ஒரு காரியத்தை செய்ய தயராகிவிட்டால் பிறகு நம்பிக்கை உங்களுக்கு தானாக வளர்ந்து விடும் என சமந்தா தெரிவித்திருக்கிறார். மேலும், சமந்தாவின் மாடலிங் போட்டோசூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











