நடிகை சமந்தாவை சுற்றும் காதல் வதந்தி.. உண்மை என்ன? மேலாளர் விளக்கம்!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, தனது நடிப்பின் மூலம் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறார். அந்த வகையில், இயக்குனர் ராஜ் நிடிமோருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் பரவி வரும் வதந்தியை சமந்தாவின் மேனேஜர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நடிகை சமந்தா, நாக சைத்தன்யாவை பிரிந்த பின் மயோசைட்டிஸ் என்ற அறியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், மிகுந்த மனவேதனையில் இருந்த சமந்தா, அதில் இருந்து மீண்டு வருவதற்கான ஆன்மீகத்தில் தனது கவனத்தை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சாகுந்தலம், குஷி போன்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதனால், சினிமாவில் இருந்து ஒதுங்கி தற்போது ஓய்வில் எடுத்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு 'ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

Samantha Raj Nidimoru

சுபம் : இந்த தயாரிப்பு நிறுவனத்தின் சுபம் என்ற படத்தை முதன் முதலில் தயாரித்து இருந்தார். 'சுபம்' என பெயரிடப்பட்ட இந்த தெலுங்கு படம் மே 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி உள்ளார். இதில், ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவாணி, சரண் பெரி மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தனது புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படமே வெற்றி பெற்றதால், மகிழ்ச்சி அடைந்த சமந்தா, 'சுபம்' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ராஜ் நிடிமோருவின் தோளில் சாய்ந்து உறங்குவது போல இருக்கும் போட்டோவை பகிர்ந்து, எங்கள் முதல் அடி, பைத்தியக்காரத்தனம் மற்றும் வித்தியாசமான கதைகள் முக்கியம் என்ற நம்பிக்கையால் தூண்டப்பட்டது. நாங்கள் சுபத்துடன், பயணம் தொடங்கிவிட்டது. என்ன ஒரு ஆரம்பம் என்று பதிவிட்டிருந்தார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: இதற்கு முன் சமந்தா, இயக்கிய ராஜ் நிடிமோருடன் திருப்பதிக்கு ஒன்றாக சென்று இருந்தார், அதே போல, ராஜ் நிடிமோருடன் அடிக்கடி பொது இடத்தில் காணப்பட்டதால் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, தோளில் சாய்ந்த படி இருக்கும் போட்டோவை சமந்தா வெளிட்டதால், ராஜ் நிடிமோரை சமந்தா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதை சமந்தாவின் மேனேஜர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சமந்தாவை பற்றிய வரும் காதல் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இயக்குநரான ராஜ் நிடிமோரு, தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடரை டிகே என்பவருடன் சேர்ந்து இயக்கி இருந்தார். மேலும், இவர் சிட்டாடெல் என்கிற வெப் தொடரை இயக்கி இருந்தார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்த போதே இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டதாகவும், சிட்டாடெல் படப்பிடிப்பின் போது அந்த நட்பு மேலும் வலுவடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இயக்குனர் ராஜ் நிடிமோருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஷியாமலி மனைவி என்கிற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FAQs
நடிகை சமந்தாவை தாக்கிய அரிய வகை நோயின் பெயர் என்ன?

"மயோசிடிஸ்" (Myositis)

Filmibeat Entertainment

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X