சமந்தாவுக்கு நடந்த 2வது திருமணம்?.. ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்த அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனையடுத்து சிங்கிளாக இருந்த சாம் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ராஜுடைய முதல் மனைவி ஷ்யாமிலி போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சமந்தா கோலிவுட்டில் நடித்து பிறகு டோலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடிக்கையில் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களது திருமணம் கோவாவில் வைத்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்துவந்தார்.
விவாகரத்து: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் பிரச்னைகள் நாளுக்கு நாள் வளர்ந்ததை அடுத்து இனியும் ஒன்றாக வாழ்ந்தால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். அந்த விவாகரத்துக்கு பலரும் பலவித காரணங்களை சொன்னார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் இதுவரை அமைதியாகவே இருக்கிறார்கள்.

ராஜுடன் காதல்: நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா சில காலம் சிங்கிளாக இருந்தார். அதனையடுத்து தி ஃபேமிலி மேன் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமோருவை காதலித்தார். இரண்டு பேரும் ஜோடியாக வெளிநாடுகள், பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார்கள். ஆனாலும் தங்கள் காதலை அவர்கள் வெளியே சொல்லாமல் இருந்தார்கள். ராஜுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது திருமணம்: இந்நிலையில் ராஜு நிடிமோருவுக்கும் சமந்தாவுக்கும் இன்று கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது. ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் இரண்டு பேருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். விரைவில் திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜின் முன்னாள் மனைவி போஸ்ட்: சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் திருமணம் நடந்திருக்கும் சூழலில் ராஜுடைய முதல் மனைவி ஷ்யாமிலி போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தனது ஸ்டோரியில், "விரக்தியானவர்கள் விரக்தியான செயலை செய்வார்கள்" என்ற மைக்கேல் புரூக்ஸின் கூற்றினை வைத்திருக்கிறார். இது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











