இரண்டாவது திருமணத்தில் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் உள்ள ஒற்றுமை.. ப்ளானோடுதான் செஞ்சிருப்பாங்களோ

சென்னை: நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் நடந்த திருமணம் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. இந்த பிரிவுக்கு பிறகு சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சைதன்யா. சூழல் இப்படி இருக்க சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு முதலில் நாக சைதன்யாவின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் சைதன்யா தனது காதலுடைய தீவிரத்தை உணர்த்தியதால் சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

விவாகரத்து செய்த ஜோடி: திருமணம் செய்துகொண்ட சமந்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். ஒருகட்டத்தில் அவர் நடிப்பது நாகார்ஜுனா உள்ளிட்டோருக்கு பிடிக்காமல் போனது என்றும்; நடிப்பை நிறுத்துமாறு சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மெல்ல மெல்ல வளர்ந்து பெரிய பிரச்னையாக வெடிக்க; நாக சைதன்யாவும், சமந்தாவும் மனம் ஒத்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்க ஆரம்பித்தார். சோபிதாவும் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகனுடைய இந்தக் காதலுக்கும் நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்ததை அடுத்து இரண்டு பேருக்கும் கடந்த வருடம் ஹைதராபாத்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

Samantha Married Raj Nidimoru Fans Compare With Naga Chaitanya s Second Wedding
Photo Credit:

சமந்தாவுக்கும் இரண்டாவது திருமணம்?: சூழல் இப்படி இருக்க சிங்கிளாக இருந்த சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எதுவும் சொல்லாமல் இருந்தார்கள். இந்நிலையில் இரண்டு பேருக்கும் இன்று கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் நடந்ததாகவும்; இதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இரண்டாவது திருமணத்தில் இருக்கும் ஒற்றுமை: விரைவில் இந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்களை புதுமண தம்பதி வெளியிடுவார்கள் என்றும் தெரிகிறது. இது ஒருபக்கம் இருக்க நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இரண்டாவது திருமணத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது சைதன்யாவும் தனது இரண்டாவது திருமணத்தை இதே டிசம்பர் மாதத்தில்தான் செய்தார். சமந்தாவுக்கும் டிசம்பர் மாதத்தில்தான் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதை கவனித்த ரசிகர்களோ முன்னாள் கணவர் இரண்டாவது திருமணம் செய்த அதே மாதத்தில் சமந்தாவும் செய்திருக்கிறார். இது எதார்த்தமாக நடந்ததா இல்லை பிளான் செய்து நடந்ததா என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X