சிஎம் விஜய்யை சந்தித்த சமந்தா.. கத்தி, தெறி, மெர்சல் ஹீரோவை மறக்காத எங்கள் தங்கம்.. அள்ளுதே!

சென்னை: நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம் இந்த வாரம் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ள அந்த படத்தின் புரமோஷனை முன்னிட்டு இன்று சென்னை வந்த சமந்தா முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தளபதி விஜய்யுடன் இணைந்து கத்தி, தெறி மற்றும் மெர்சல் என ஹாட்ரிக் அடித்திருந்தார் சமந்தா. செல்ஃபி புள்ளையாக சமந்தாவை தளபதி ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ள விஜய்யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சமந்தா.

Samantha meets CM Vijay onbehalf Engal Thangam Movie release

புதிய படங்களுக்கு தமிழ்நாட்டில் முதல் ஒரு வாரத்துக்கு காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதியை விஜய் முன்பே வழங்கிய நிலையில், பல சினிமா பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சமந்தா: சத்யம் தியேட்டரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சேலை அணிந்து தேவதை போல வந்த சமந்தா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள எங்கள் தங்கம் படத்தில் நடித்த நடிகை கெளதமியும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று சமந்தாவின் நடிப்பையும் விடா முயற்சியையும் பாராட்டினார். பல தடைகளை தாண்டி தனது தயாரிப்பில் உருவாகியுள்ள எங்கள் தங்கம் படத்தை இந்த வாரம் ஜூன் 19ம் தேதி சமந்தா ரிலீஸ் செய்கிறார். ஜன நாயகன் படம் விஜய் பிறந்தநாளுக்கு வரவில்லை என்றாலும் செல்ஃபி புள்ள சமந்தாவின் எங்கள் தங்கம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

விஜய்யை சந்தித்த செல்ஃபி புள்ள: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களிலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்திலும் சமந்தா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், எங்கள் தங்கம் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த சமந்தா முதல் வேலையாக முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்ரி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், கூடிய சீக்கிரமே கீர்த்தி சுரேஷ் - விஜய் சந்திப்பும் நிகழும் என எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X