மக்கள் மனம் கவர்ந்த சமந்தா.. 2019ம் ஆண்டில் ரொம்ப விரும்பப்பட்டவராக தேர்வு

ஹைதரபாத்: 2019ம் ஆண்டில், மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 40 க்கும் கீழ் குறைவான வயதுடைய பெண் பிரபலங்களை மையபடுத்தி ஆன்லைன் ஓட்டெடுப்பு நடத்தியது.

அதில் முதல் இடத்தை சமந்தா தட்டி சென்றார். Most desirable Women 2019 என்ற பட்டம் நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 தனித்திறமை

தனித்திறமை

இந்த ஓட்டெடுப்பின் முக்கிய அம்சமாக செக்ஸ் அப்பீல், தனி திறமை, ஆளுமை, தன்னம்பிக்கை இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த பெண்ணை தேர்வு செய்வதாக அறிவித்திருந்தது. இந்த ஓட்டெடுப்பில் நடிகை சமந்தா முதல் இடத்தை பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திருமணத்துக்கு பின்னர் சினிமா நடிகைகளை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற மாய பிம்பத்தை உடைத்தெறிந்து உள்ளார் நடிகை சமந்தா.

 திருமணம் தடை இல்லை

திருமணம் தடை இல்லை

சமூக வாழ்வில் சமந்தா ஒரு சுதந்திரமான பெண்ணாகவும், அதீத தன்னம்பிக்கை கொண்டவராகவும் உள்ளதால் மட்டுமே, திருமணதிற்கு பிறகும் அவரது படத்திற்கு நல்ல வரவேற்ப்பு இவருக்கு இருக்கிறது. நட்சத்திர தம்பதிகளான நாகர்ஜுனா, அமலாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்துக்கு பின்னரும் சமந்தா தொடர்ந்து நடித்து வந்தத்தோடு அவர் நடித்த 6 படங்களும் தொடர் ஹிட் அடித்தன. அவர் திருமணத்துக்கு பிறகு விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.

 நம்பிக்கையின் நாயகி

நம்பிக்கையின் நாயகி

மேலும் அந்த பத்திரிக்கைக்கு சமந்தா கொடுத்துள்ள பேட்டியில், கல்யாணம் தனது career க்கு தடையாக இல்லை என்பதாகவும், அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு தான் தனது வெற்றிக்கு காரணம் என்றும் கூறியிருந்தார். அழகு என்பது தோற்றத்தில் மட்டும் இல்லை என்றும், நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது நமக்குள் ஏற்படும் positive vibration பிறரை கவர்ந்துவிடும். இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். நான் முதல் முறையாக Bold டான costumeவுடன் வெளிவந்தவுடன் என்னை அனைவரும் கேலி செய்தனர் அதையே நான் தொடர்ந்து இரண்டாவது முறையாக செய்தபோது கேலியும் கிண்டலும் குறைந்துவிட்டன. நமக்கான பாதையை நாம் தீர்மானிக்க வேண்டுமே தவிர பிறர் அல்ல என்றும் கூறினார்.

 பெண்களுக்கு ரோல் மாடல்

பெண்களுக்கு ரோல் மாடல்

ஆண் ரசிகர்களைவிட, பெண் ரசிகைகள் அதிகம் கொண்டவர் சமந்தா என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் சொல்லபடுவது உண்டு. நெட்டிசன்களால் வாக்களித்து இந்த பட்டத்தை வென்றுள்ள சமந்தா, அவர் ஒரு நடிகையாக மட்டும் பார்க்க படவில்லை , பிற பெண்களுக்கு ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார் என்பது தெளிவாகிறது .அவரது பேட்டியில் சினிமாவை தாண்டி சமூகத்தில் தனக்கிருக்கும் பொறுப்பையும் அவர் தெரிவித்திருப்பதாக அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை ரீட்வீட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X