கவர்ச்சி தனி ரூட்டு… சமந்தாவின் எண்ணம் இதுதானா ?.. இப்போ இனிமேல்! இப்படித்தானா?

ஹைதராபாத் : தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

முன்னணி ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சமந்தா திடீரென ஐட்டப் பாடலுக்கு ஆட்டம் போட்டது பலரை முகம் சுளிக்க வைத்தது.

ஆனால், அந்த ஒரே ஒரு பாட்டு சமந்தாவை எங்கையோ கொண்டுபோய் விட்டு மிகப்பெரிய அளவில் வைரலானது.

ஐட்டம் பாடல்

ஐட்டம் பாடல்

நாகசைத்தான்யாவை பிரிந்த சமந்தா, மன அழுத்தத்தில் கோவில் குளம் என ஆன்மீகப்பயணம் சென்றார். என்னடா சமந்தாவின் வாழ்கை இப்படி ஆகிப்போச்சுனு ரசிகர்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில். அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அந்த பாடலில் குட்டை பாவாடை போட்டுக்கொண்டு கவர்ச்சியான நடன அசைவுகளுடன் நடனம் அடியிருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

அந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியான போதே இந்த பாடலுக்கு சர்ச்சை கிளம்பியது. அதில், ஒழுக்க சீலன் ஒசந்த மனுஷன்... வெளிய போடும் வேஷம்ங்க... வெளக்க அணைச்சா போதும் எல்லாம்... வெளக்க அணைச்சா போதும் எல்லாம்... வெளக்குமாறும் ஒன்னுதாங்க என்று வரியை கேட்டு ஆண்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால், பாடல் வெளியானதும் தியேட்டரில் ஆட்டம் போட்டதே ஆண்கள் தானாம்.

கவர்ச்சிக்கு மாறிய சமந்தா

கவர்ச்சிக்கு மாறிய சமந்தா

முதலில் இந்த பாடலுக்கு நடனம் ஆட சமந்தாவிடம் கேட்டபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம், பின்னர் அல்லு அர்ஜுன் பேசியதை அடுத்தே இந்த ஐட்டம் பாடலுக்கு கூடுதல் சம்பளத்துடன் ஆட சம்மதித்துள்ளார். சமீபகாலமாக சமந்தாவுவின் சமூகபக்கங்களை பார்க்கும் போது அவர் கவர்ச்சிக்கு மாறியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இனிமேல் துணிச்சலாக கவர்ச்சியான ரோலிலும் நான் நடிக்க தயார், என்பதை மறைமுகமாக சொல்கிறாரா சமந்தா போன்ற பல கேள்விகள் அவரது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

கவர்ச்சி அட்ராசிட்டி

கவர்ச்சி அட்ராசிட்டி

தற்போது சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சகுந்தலம் மற்றும் யசோதா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் சமந்தாவின் ரசிகர்களை நிச்சயம் திருப்திபடுத்தும். ஆனால் சமந்தாவோ தயாரிப்பாளர்களை தன் பக்கம் இழுக்க கவர்ச்சி அட்ராசிட்டி செய்ய திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X