எப்படி இருந்த சமந்தா.. இப்படி மாறிட்டாரே.. 2 பீஸ் உடையை விட இந்த லுக் தாறுமாறா இருக்கே!

சென்னை: கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததில் இருந்தே சமந்தா கவர்ச்சி ரூட் பக்கம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் தனக்குப் பிடித்ததை செய்து வருகிறார். மயோசைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் முகம் ரொம்பவே பெருசாகி இருந்தது. கண்ணாடி எல்லாம் அணிந்துக் கொண்டு கையில் மாலை எல்லாம் வைத்து உருட்டிக் கொண்டு இருந்தார்.

ஆனால், தற்போது ஆளே அதிரடியாக மாறியுள்ளார் சமந்தா. சில மாத ஓய்வுக்குப் பிறகு செம ஃபிட்டாக மாறியுள்ள சமந்தா முகமெல்லாம் ஒட்டிப் போய் பார்க்கவே பார்பி டால் போல மாறியுள்ளார்.

Samantha new look and her glamour costume shocks fans


வருண் தவான் உடன் இணைந்து சிட்டாடல் இந்திய வெர்ஷனான ஹனி பனியில் நடித்துள்ள சமந்தா சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி அறிமுக நிகழ்ச்சியில் வெற்றிநிற றெக்கைகள் போன்ற டிசைன் கொண்ட உடையை அணிந்துக் கொண்டு வந்திருந்தார். அதன் மேக்கிங் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார்.

டூ பீஸ் உடையில் சமந்தா: உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா திடீரென நீச்சல் குளத்தில் டூபீஸ் உடையில் முதன் முதலாக தோன்றி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர்ந்து ஃபேஷன் மாத இதழ் அட்டைப் படங்களுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

Samantha new look and her glamour costume shocks fans


பட வாய்ப்பு இல்லை: சினிமாவில் இருந்து சில மாதங்கள் ஓய்வுக்காக விளங்கிய சமந்தா இன்னும் புதிய பட வாய்ப்புகளை பெறவில்லை. அவர் ஏற்கனவே நடித்து இருந்த சிட்டாடல் வெப்சீரிஸ் தான் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக காத்திருக்கிறது. அடுத்ததாக சமந்தா தமிழ் படத்தில் நடிப்பாரா அல்லது பாலிவுட் படமா என்கிற கேள்விகள் சினிமா வட்டாரத்திலே எழுந்து வருகிறது. அதிகமாக பாலிவுட் பட வாய்ப்புகளே சமந்தா தேடி வருவதாக கூறுகின்றனர்.

உள்ளாடை தெரிய: சமீபத்தில் எப்படி டூபீஸ் உடையை அணிந்து குளத்தில் போஸ் கொடுத்து இருந்தாரோ, அதைவிட அதிக கிளாமர் உடன் தற்போது கருப்பு நிற கோட் சூட் அணிந்து அதை ஓபனாக விட்டு கருப்பு நிற உள்ளாடை தெரியும் விதமாக எக்ஸ்ட்ரா கிளாமரில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளன.

Samantha new look and her glamour costume shocks fans


பழைய சமந்தா வேண்டும்: மெழுகு பொம்மை போல இருக்கும் சமந்தாவின் முகத்தை பார்த்த ரசிகர்கள், இது ரொம்ப ஃபேக்காக உள்ளது என்றும் எங்களுக்கு பழைய க்யூட்டான சமந்தா தான் வேண்டும் என கமெண்ட் போட்டு வருகின்றனர். சமந்தா சில மாதங்களுக்கு முன்பு இருந்த முகத்தோற்றத்திலேயே இப்போ இல்லாமல் ஆளே மாறிட்டாரே என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X