த்ரிஷாவுக்கு சமந்தா 'சுவச் பாரத்' சவால்: துடைப்பம் வேணுமா பாப்பா?
சென்னை: சுத்தமான இந்தியா சவாலை ஏற்குமாறு சமந்தா சக நடிகையான த்ரிஷாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
நம் நாட்டை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி சுத்தமான இந்தியா திட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று துவக்கி வைத்தார். அதில் இருந்து பல பிரபலங்கள் சக பிரபலங்களுக்கு சுத்தமான இந்தியா சவாலை விடுத்து வருகிறார்கள்.
சானியா மிர்சா, கமல் ஹாஸன், நாகர்ஜுனா, அமலா, ராம் சரண் தேஜா, தமன்னா என்று பலரும் சுத்தமான இந்தியா சவாலை ஏற்று கையில் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியை கூட்டி சுத்தம் செய்தார்.

அதன் பிறகு அவர் த்ரிஷாவுக்கு சுத்தமான இந்தியா சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் டார்லிங் த்ரிஷாவை சுத்தமான இந்தியா சவாலுக்கு பரிந்துரைக்கிறேன். என்னுடைய துடைப்பம் வேண்டுமா பாப்பா? என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











