எவ்ளோ சம்பளம் கொடுத்தாலும் சரி, புது "பாய்ஸ்" வேணாம் பாஸ்...மறுக்கும் சமந்தா!!
சென்னை: அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் சரி, புதிய நடிகர்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று ஒரு கொள்கை முடிவோடு இருக்கிறாராம் சமந்தா.
தமிழில் சொல்லிக் கொள்வது போல் வெற்றிப்படங்களைக் கொடுக்காவிட்டாலும், கூட இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் சமந்தா.
தற்போது தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக 'அஞ்சான்' படத்திலும் நடித்து வருகிறார்.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதால் இவரது சம்பளமும் எகிறியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அதிக சம்பளம் தருவதாக கூறி, தெலுங்கில் புதுமுக நடிகர்களுடன் ஜோடி சேர கிடைத்த வாய்ப்புகளை சமந்தா மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமந்தா கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள பேட்டியில் கூறப்பட்டிருப்பதாவது :-

விருப்பமில்லை...
புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க விருப்பம் இல்லை. இனிமேல் எந்த புதுமுகத்துடனும் நடிக்கவும் மாட்டேன்.

நேரமில்லை...
புது முக நடிகருடன் நடிக்க எனக்கு நேரமும் இல்லை என்றும் சமந்தா கூறுகிறாராம்.

எதிர்பார்ப்பு...
மேலும், கத்தி, அஞ்சான் படங்களை சமந்தா மிகவும் எதிர் பார்க்கிறாராம்.

சிறந்த வேடம்...
ஏனெனில், லிங்குசாமி சிறந்த இயக்குனர். சண்டைக் கோழியில் மீராஜாஸ்மின் கேரக்டரை சிறப்பாக உருவாக்கி இருந்தார். அஞ்சான் படத்திலும் எனக்கு அது போல் சிறந்த வேடம் அமைந்துள்ளது என இவ்வாறு அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அது சரி.. ஆண்டிப்பட்டிக்குப் போகவே பஸ் காசு இல்லையாம்... இதுல அரசம்பட்டியில பங்களா கட்டப் போறாங்களாம்... அந்தக் கதையாவுல்ல இருக்குது!


Click it and Unblock the Notifications











